News February 3, 2026
சிவகங்கை: உங்க வீட்டுல குழந்தை இருக்கா.? கலெக்டர் குட் NEWS

சிவகங்கை மாவட்டத்தில் கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் 6 மாதம் முதல் 6 வயது வரை உள்ள பெற்றோர்கள், எந்தவித தயக்கமும் இன்றி தங்களை அங்கன்வாடி மையத்தில் பதிவு செய்து கொள்ளலாம். மேலும் 2 வயது முதல் 6 வயது வரை ஆன குழந்தைகளை தவறாது அங்கன்வாடி மையத்தில் சேர்த்து பயனடைய மாவட்ட ஆட்சியர் கா.பொற்கொடி அழைப்பு விடுத்துள்ளார். இதை தேவைப்படுவோருக்கு SHARE பண்ணி உதவுங்க.
Similar News
News February 12, 2026
சிவகங்கை: அக்காள் கணவரை கொன்றவருக்கு ஆயுள்.!

காரைக்குடி அருகே சிறு சாக்கவயலைச் சேர்ந்த கூலி தொழிலாளி ராஜு (26). இவர் 2023 ம் ஆண்டு திருவேகம்பத்தூர் அருகே புக்குடியில் உள்ள தனது அக்காள் கவிதா வீட்டுக்குச் சென்றார். அங்கு தனது அக்காள் கணவர் ரவிச்சந்திரனிடம் மது வாங்கித் தருமாறு தகராறு செய்த நிலையில், அவரை கொலை செய்தார். இந்த வழக்கை விசாரித்த சிவகங்கை நீதிமன்றம் ராஜுவுக்கு ஆயுள் தண்டனை விதித்து நேற்று தீர்ப்பு வழங்கியது.
News February 12, 2026
சிவகங்கை SP அலுவலகத்தில் தேர்தல் தனிப்பிரிவு துவக்கம்

சிவகங்கை எஸ்.பி., அலுவலகத்தில் ஏ.டி.எஸ்.பி., சுகுமார் தலைமையில் ஒரு இன்ஸ்பெக்டர், 4 எஸ்.எஸ்.ஐ.,க்கள் என 15 பேர் அடங்கிய தேர்தல் தனிப்பிரிவு துவங்கப்பட்டுள்ளது. இக்குழுவினர் முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ள உள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளில் பதட்டமான ஓட்டுச்சாவடிகளை கண்டறிதல், வாக்கு எண்ணும் மையத்துக்கு பாதுகாப்பு அளித்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்கின்றனர்.
News February 12, 2026
சிவகங்கை: கணவருடன் பிரச்சனையா.? உடனே CALL

பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் நோக்கில் அரசு பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தியுள்ளது. கணவன் தொல்லை, குடும்ப வன்முறை, வேலைத்தளங்களில் பாலியல் தொல்லை உள்ளிட்ட பிரச்சனைகள் நடந்தால் பெண்கள் உடனடியாக 181 உதவி எண்ணுக்கு அழைத்து புகாரளிக்கலாம். பெண்களின் பாதுகாப்பு மற்றும் நலனை காக்க 24 மணி நேரமும் இந்த சேவை செயல்படுகிறது. மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.


