News May 9, 2024
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க உறுப்பினர்கள் கூட்டம்

திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் கிழக்கு, மேற்கு மற்றும் தெற்கு மண்டல உறுப்பினர்கள் சந்திப்பு கூட்டம், ஏற்றுமதியாளர்கள் சங்கத்தில் நேற்று நடந்தது. இதில் சங்க நிறுவன தலைவர் சக்திவேல் பேசுகையில்,
வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானதும் , புதிய ஆர்டர் வரத்து அதிகரிக்கும்; அவற்றை எதிர்கொள்ள திருப்பூர் தயாராக வேண்டும்,” என, ஏற்றுமதியாளர்கள் சங்க நிறுவன தலைவர் சக்திவேல் நேற்று பேசினார்.
Similar News
News November 4, 2025
திருப்பூர் இரவு ரோந்து காவலர் விபரம்!

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 04.11.2025 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். உடுமலைப்பேட்டை, தாராபுரம், பல்லடம், காங்கேயம், அவினாசி பகுதியில் உள்ள மக்கள் தங்கள் பகுதியில் குற்றம் நடைபெற்றால், உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்தவும். அவசர உதவிக்கு 108 அழைக்கவும்.
News November 4, 2025
திருப்பூரில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்!

திருப்பூரில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (நவ.05) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை, திருநகர், பாரப்பாளையம், செங்குந்தபுரம், பூச்சக்காடு, மங்கலம் ரோடு, ஆலாங்காடு, வெங்கடாசலபுரம், காதி காலனி, மாஸ்கோ நகர், குமரப்பபுரம், சூசையாபுரம், மிலிட்டரி காலனி, பெரியாண்டிபாளையம், கல்லம்பாளையம், அணைப்பாளையம், கொங்கணகிரி கோவில், ஆர்.என்.புரம், காலேஜ் ரோடு ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
News November 4, 2025
திருப்பூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் நியமனம்

திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், திருப்பூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக இருந்த அமைச்சர் சாமிநாதன் துணைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் திருப்பூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக தற்போது தெற்கு மாவட்ட பொறுப்பாளராக உள்ள இல.பத்மநாபனை நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளார்.


