News February 3, 2026

குமரி: தேசிய அளவில் சாதனை புரிந்த காவலர்கள்

image

குமரி மாவட்ட காவல்துறையைச் சேர்ந்த உதவி ஆய்வாளர் கீதா மற்றும் தலைமை காவலர் டேவிட் ஜான் ஆகியோர், 28.01.2026 முதல் 01.02.2026 வரை திருவனந்தபுரத்தில் நடைபெற்ற 46 வது தேசிய மாஸ்டர்ஸ் அத்லெடிக் பெடரேஷன் ஆஃப் இந்தியா போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளனர். சிறப்பாக செயல்பட்டு போட்டிகளின் வெற்றி பெற்றவர்களை மாவட்ட எஸ்.பி ஸ்டாலின் இன்று (பிப். 2) பாராட்டினார்.

Similar News

News February 4, 2026

குமரி: லாரி கவிழ்ந்து ஓட்டுநர் பலி

image

பேச்சிப்பாறை அருகே மூக்கறக்கல் பகுதியில் நேற்று மாலை மரத்தடிகள் ஏற்றி கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி மரத்தடியுடன் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் லாரியை ஓட்டிச் சென்ற ஓட்டுநர் அகில்குமார் உயிரிழந்தார். அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News February 4, 2026

குமரி அருகே கல்லூரி மாணவர் தற்கொலை

image

ஆரல்வாய்மொழி பகுதியைச் சேர்ந்தவர் முத்து கிஷோர்(19). இவர் கல்லூரி ஒன்றில் டிப்ளமோ இரண்டாம் ஆண்டு படித்து வந்த நிலையில் நேற்று கல்லூரிக்கு செல்லாமல் இருந்த நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப் பதிவு செய்து கல்லூரி மாணவரின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News February 3, 2026

குமரி: FIR பெறுவதில் சிக்கலா.? SP புதிய தகவல்

image

கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி ஸ்டாலின் இன்று வெளியிட்ட செய்தி குறிப்பில், FIR உங்கள் உரிமை குறித்த போஸ்டர் அனைத்து காவல் நிலையங்களிலும் ஒட்டப்பட்டுள்ளது. அதில் புகார்தாரருக்கு FIR நகலை இலவசமாக பெரும் உரிமை இருப்பது தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால் 7708239100 என்ற பப்ளிக் ஃபீடுபேக் சென்டர் எண்ணை தொடர்பு கொண்டு புகாரளிக்கலாம் என்று அதில் அவர் கூறியுள்ளார்.

error: Content is protected !!