News February 2, 2026
திருச்சியில் குவிந்த 663 மனுக்கள்

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, தொகுப்பு வீடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மொத்தம் 663 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. இந்த மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
Similar News
News February 6, 2026
திருச்சி: தொடர் திருட்டில் ஈடுபட்ட இளைஞர் கைது

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் பயணிகளிடம் தொடர் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருவதாக புகார்கள் எழுந்தன. இந்நிலையில் திருச்சி மாவட்ட ரயில்வே பாதுகாப்பு படையினர், ஜங்சன் ரயில் நிலையத்தில் தொடர் திருட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த இளைஞர் ஒருவரை இன்று கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து இரண்டு தங்க சங்கிலிகளை பறிமுதல் செய்து அவரை சிறையில் அடைத்தனர்.
News February 6, 2026
திருச்சி: மக்களே… இனி வங்கி செல்ல தேவையில்லை!

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா?. இதற்கு SBI – 9022690226, கனரா வங்கி – 907603000 , இந்தியன் வங்கி – 8754424242, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி – 9677711234 ஆகிய எண்களில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப்பில் வந்துவிடும். SHARE IT.
News February 6, 2026
திருச்சி: ரயில்வேயில் 22,195 காலியிடங்கள் அறிவிப்பு!

திருச்சி மக்களே, ரயில்வே துறையில் காலியாக உள்ள 22,195 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 18 – 33 வயதுக்குட்பட்ட 10-வது தேர்ச்சி பெற்றவர்கள், வரும் மார்ச் 3-ம் தேதிக்குள் <


