News February 2, 2026

புதுச்சேரி கவர்னர் அதிரடி உத்தரவு

image

புதுச்சேரியில் புதிதாக பொறுப்பேற்கும் ஆட்சியாளர்கள் அவரவர் விருப்பப்பட்ட அரசு ஊழியர்களை சர்வீஸ் பிளேஸ்மென்ட் அடிப்படையில் சொந்த பணிக்கு அழைத்துக் கொள்வது வழக்கமானது. இதனால் அனைத்து துறைகளிலும் மற்ற அரசு ஊழியர்களுக்கு கூடுதல் பணி சுமை ஏற்படுவதாக கவர்னர் கைலாஷ்நாதனுக்கு புகார் சென்றது. இதை தொடர்ந்து இந்த சர்வீஸ் பிளேஸ்மென்டை நேற்று அதிரடியாக ரத்து செய்ய கவர்னர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Similar News

News February 9, 2026

புதுச்சேரி: அடித்து கொலை – குற்றவாளி கைது

image

விழுப்புரம் மாவட்டம் வானூரை அடுத்த இடையஞ்சாவடி கிராமத்தை சேர்ந்தவர் வினோத் குமார் (40). தச்சுத்தொழிலாளியான இவர் புதுச்சேரி ஆலங்குப்பத்தில் உள்ள தனியார் பாரில் கடந்த வாரம் மது குடித்தபோது ஏற்பட்ட தகராறில் அடித்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக கோரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து மூன்று பேரை கைது செய்தனர். இதனை தொடர்ந்து தலைமறைவாக இருந்த ஹரி-யை (33) நேற்று கைது செய்தனர்.

News February 8, 2026

புதுச்சேரி: உங்க போனுக்கு தேவை இல்லாத CALL வருகிறதா?

image

புதுச்சேரி மக்களே, உங்கள் போனுக்கு அடிக்கடி கிரெடிட் கார்டு, லோன் போன்ற தேவை இல்லாத அழைப்புகள் வருகிறதா? இதனை தடுக்க ‘1909’ என்ற எண்ணை தொடர்பு கொண்டு ‘DO NOT DISTURB’ என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்தால் போதும். அதுபோல 1909 என்ற எண்ணுக்கு ‘START 0’ அல்லது ‘START 1’ என SMS அனுப்புவதன் மூலமாகவும் கிரெடிட் கார்டு, லோன் போன்ற தேவையற்ற அழைப்புகளை உங்களால் தடுக்க முடியும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!

News February 8, 2026

புதுச்சேரி: டிகிரி போதும் – வங்கி வேலை

image

பேங்க் ஆப் பரோடா வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: வங்கி வேலை
2. பணியிடங்கள்: 419
3. வயது: 25 – 34
4. சம்பளம்: ரூ.64,820 – ரூ.1,05,280
5. கல்வித் தகுதி: டிகிரி போதும்
6. கடைசி தேதி: 26.02.2026
7. விண்ணப்பிக்க: <>CLICK <<>>HERE
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!