News February 2, 2026

கிருஷ்ணகிரி: பாட்டியை அடித்து கொன்ற கொடூர பேரன்!

image

ஊத்தங்கரையை அடுத்த சென்னப்பநாயக்கனூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ராணி (57). இவா் தனது மகன்வழி பேரன் சிரஞ்சீவிக்கு (25) தனது பெயரில் புதிதாக பொக்லைன் எந்திரம் வாங்கிக் கொடுத்துள்ளாா். இந்நிலையில் நேற்று சிரஞ்சீவி வண்டிக்கான கடனை கட்டுவதற்கு பணம் கேட்டுள்ளார். இதில் ஏற்பட்ட தகராறில் சிரஞ்சீவி ராணியை அடித்ததில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரந்தார். இதையடுத்து போலீசார் சிரஞ்சீவியை கைது செய்தனர்.

Similar News

News February 11, 2026

கிருஷ்ணகிரி: ஃபீஸ் இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

image

கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கான இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம். 1. கிருஷ்ணகிரி மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 04343-225069 2.தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441 3.Toll Free 1800 4252 441 4.சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126 -5.உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756. மற்றவர்களுக்கு ஷேர் SHARE பண்ணுங்க!

News February 11, 2026

கிருஷ்ணகிரி: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் ஆஃபர்!

image

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் <>இங்கு கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். ரேஷன் கார்டு, வங்கி கணக்கு போன்ற ஆவணங்களை இதனுடன் சமர்பிக்க வேண்டும். பிறரும் பயன்பெற SHARE பண்ணுங்க!

News February 11, 2026

தளியில் மதுபானம் கடத்திய நபர் கைது

image

தளி காவல் நிலைய பகுதியில் கும்ளாபுரம் சோதனை சாவடி அருகே இன்று (பிப்.11) போலீசார் வாகன சோதனையில் இருந்த போது அவ்வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது வெளிமாநில மதுபானங்கள் இருந்தது. மதுபானங்களை கடத்தி வந்த நபரை கைது செய்து அவரிடமிருந்து வாகனத்துடன் மதுபானங்கள் பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு வந்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!