News May 9, 2024

இதுவரை 56 ஆயிரம் பேர் விண்ணப்பம்

image

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள 450க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் விண்ணப்பப் பதிவு கடந்த 6ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த 3 நாட்களில் மட்டும் 56,515 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதற்கு விண்ணப்பிக்க அடுத்த மதம் (ஜூன்) 6ஆம் தேதி கடைசி நாளாகும். இதற்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் <>www.tneaonline.org<<>> என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

Similar News

News August 20, 2025

MGR படத்தை பயன்படுத்த TVK-க்கு தகுதியில்லை: EX அமைச்சர்

image

மதுரை அருகே பாரபத்தியில் தவெகவின் 2-வது மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டுக்காக விஜய், MGR, அண்ணா படங்கள் கொண்ட பேனர் வைக்கப்பட்டுள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், இதுபற்றி பேசிய முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன், தவெகவின் இச்செயல் தேவையற்றது என்றும், அண்ணா, MGR படங்களைப் பயன்படுத்த தவெகவிற்கு தகுதியில்லை எனவும் விமர்சித்தார்.

News August 20, 2025

வெண்கலப் பதக்கம் வென்றார் மனு பாக்கர்

image

கஜகஸ்தானில் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் 10 மீட்டர் பிஸ்டல் பிரிவில் மனுபாக்கர் 219.7 புள்ளிகள் பெற்று வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். சீனாவை சேர்ந்த குயிங்கி மா 243.2 புள்ளிகள் பெற்று தங்கப்பதக்கமும், கொரியாவை சேர்ந்த ஜின் யாங் 241.6 புள்ளிகள் பெற்று வெள்ளியும் வென்றனர். அணி பிரிவில் மனுபாக்கர், சுர்சி சிங், பாலக் இணைந்து 1730 புள்ளிகள் பெற்று 3-ம் இடம்பிடித்தனர்.

News August 20, 2025

அர்ஜுன் தாஸுடன் நடிக்கும் ஐஸ்வர்யா லக்‌ஷமி

image

மாரி 1, 2 பாகங்கள், காதலில் சொதப்புவது எப்படி போன்ற படங்களை இயக்கியவர் பாலாஜி மோகன். இவர் தற்போது காதல் மற்றும் காமெடி கலந்த வெப்தொடர் ஒன்றை இயக்குகிறார். இதில் அர்ஜுன் தாஸ் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக கட்டா குஸ்தி, பொன்னியன் செல்வன் 1, 2 பாகங்களில் நடித்த ஐஸ்வர்யா லக்‌ஷமி கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

error: Content is protected !!