News February 2, 2026

FLASH: முன்னாள் அமைச்சர் காலமானார்

image

ராஜஸ்தான் மாநில பாஜக முக்கிய தலைவரும், EX அமைச்சருமான ஹேம் சிங் பதானா(55) காலமானார். கேன்சர் பாதிப்பால் கடந்த 5 மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், சற்றுமுன் அவரது உயிர் பிரிந்தது. குர்ஜார் சமூகத்தின் முக்கிய முகமாக அறியப்பட்ட ஹேம் சிங் பதானா, வசுந்தரா ராஜேவின் அமைச்சரவையில் முக்கிய பங்கு வகித்தார். அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Similar News

News February 11, 2026

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: மடியின்மை ▶குறள் எண்: 606▶குறள்: படியுடையார் பற்றமைந்தக் கண்ணும் மடியுடையார் மாண்பயன் எய்தல் அரிது. ▶பொருள்: தகுதியுடையவரின் அன்புக்குப் பாத்திரமானவராக இருப்பினும் சோம்பலுடையவர்கள் பெருமை எனும் பயனை அடைவதென்பது அரிதாகும்.

News February 11, 2026

அதிமுக MP வழக்கில் கோர்ட் காட்டம்!

image

அதிமுக MP தம்பிதுரையின் பல்கலை., ஆக்கிரமித்துள்ள நிலங்கள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய TN அரசுக்கு சென்னை HC உத்தரவிட்டுள்ளது. தம்பிதுரைக்கு சொந்தமான கல்வி நிறுவனம் & பல்கலை., ஆக்கிரமித்துள்ள அரசு நிலத்தை மீட்க கோரிய வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் தாக்கல் செய்த சர்வே அறிக்கையால் கடும் அதிருப்தியான நீதிபதிகள், 2 வாரங்களில் தங்கள் உத்தரவை நிறைவேற்ற அறிவுறுத்தியுள்ளனர்.

News February 11, 2026

இஸ்லாமிய வெறுப்பால் பாஜக வெற்றி: ஷாநவாஸ்

image

இஸ்லாமிய பிரதிநிதித்துவத்தில் பாஜக முன்வைத்த சோஷியல் இன்ஜினியரிங் பெரிய அளவில் வெற்றி பெற்றிருக்கிறது என்று ஆளூர் ஷாநவாஸ் தெரிவித்துள்ளார். இஸ்லாமியர் ஓட்டுகளே எங்களுக்கு தேவையில்லை என்ற இடத்திற்கு பாஜக வந்துவிட்டது. இந்த மண்ணில் இருக்கும் மிகப்பெரிய மக்களை வேண்டும் என்று ஒரு கட்சி சொல்கிறது. சமூகத்தின் எல்லா மட்டத்திலும் இஸ்லாமிய வெறுப்பு ஊடுருவியுள்ளது எனவும் விமர்சித்தார்.

error: Content is protected !!