News February 2, 2026
தமிழக அரசு என் படத்த கண்டுக்கல: சேரன் வேதனை!

‘திருமணம்’ படத்திற்கு தமிழக அரசின் விருது கிடைக்காததை இயக்குநர் சேரன் விமர்சித்துள்ளார். தேர்வு குழுவினரால் தனது படம் கண்டுகொள்ளப்படாமல் போனது அவர்களின் நுண்ணிய பார்வை அற்ற தன்மை அல்லது தங்களை சார்ந்துள்ளவர்களுக்கு மட்டுமே விருது கொடுக்கும் தன்மையை காட்டுவதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், நேர்மையான முறையில் பாரபட்சமின்றி விருதுகள் சென்றைடைய வேண்டும் எனவும் தனது பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News February 20, 2026
தங்கம், வெள்ளி.. விலை ₹60,000 குறைந்தது

தங்கம் விலை இன்று சவரனுக்கு ₹640 குறைந்தாலும், வெள்ளி விலையில் மாற்றமில்லாமல் 1 கிராம் ₹270-க்கு விற்பனையாகிறது. அதேநேரம், பிப்.11 – 20 வரையிலான 10 நாள்களில் 1 கிராம் ₹60-ம், 1 கிலோ ₹60,000-ம் குறைந்துள்ளது. இதனால் வெள்ளி நகைப் பிரியர்கள் மனமகிழ்ச்சி அடைந்துள்ளனர். வரும் நாள்களிலும் விலை குறையும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர்.
News February 20, 2026
டிரம்ப் விதித்த வரிகள் செல்லாது

இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் மீது வரிகளை விதித்து தள்ளிய டிரம்ப்புக்கு, அந்நாட்டு SC பேரிடியை கொடுத்துள்ளது. அவர் தனது அதிகார வரம்புகளை மீறி வரிகளை விதித்திருப்பதாகவும், இதில் நாடாளுமன்றத்தின் ஒப்புதல் தேவை எனவும் நீதிபதிகள் கூறியுள்ளனர். டிரம்ப்பின் வரிவிதிப்பு நடவடிக்கையால் US-ன் தொழில்களும், 12 மாகாணங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக தொடரப்பட்ட வழக்கில் இந்த உத்தரவை அமெரிக்க SC பிறப்பித்துள்ளது.
News February 20, 2026
BREAKING: கட்சியில் இருந்து நீக்கம்: விஜய் அதிரடி WARNING

தவெக சார்பில் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு சமர்ப்பிக்கும் கால அவகாசம் இன்றுடன் நிறைவடைந்தது. இந்நிலையில், 234 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை கட்சி தலைமை மட்டுமே வெளியிடும் என விஜய் உத்தரவின்பேரில் தவெக தலைமை அறிவித்துள்ளது. மேலும், தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி, யாராவது மோசடியில் ஈடுபட்டால், உடனே கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.


