News February 2, 2026
வேலூர்: வாலிபர் துடிதுடித்து பலி!

காட்பாடி கல்புதூரை சேர்ந்தவர் கார்த்தி (31). இவர் சித்தூரில் ஒரு தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து பைக்கில் கார்த்தி வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்த கார்த்தி கிறிஸ்டியான்பேட்டை சோதனை சாவடி அருகே சாலையோரம் நின்றிருந்த லாரியில் மோதி தூக்கி வீசப்பட்டார். வேலூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி கார்த்தி பரிதாபமாக உயிரிழந்தார்.
Similar News
News February 18, 2026
வேலூரில் EB பில் எகிறுதா..?

வேலூர் மக்களே உங்க கரண்ட் பில் அதிகமா வருதா..?<
News February 18, 2026
வேலூரில் விஜய் மக்கள் சந்திப்பு கூட்டம்; எஸ்.பி ஆய்வு

வேலூரில் தவெக தலைவா் விஜய்யின் மக்கள் சந்திப்பு கூட்டம் அகரம்சேரியில் வரும் திங்கள்கிழமை (பிப்.23) நடைபெற உள்ளது. இதையொட்டி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.யு.சிவராமன் நேற்று (பிப்.17) கூட்டம் நடைபெற உள்ள மைதானத்தில் ஆய்வு மேற்கொண்டாா். சேலத்தைத் தொடா்ந்து, தற்போது வேலூரின் அகரம்சேரியில் தவெக தலைவா் விஜயின் மக்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற உள்ளது பெரும் எதிர்பார்ப்பதை ஏற்படுத்தி உள்ளது.
News February 18, 2026
வேலூர் மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு

ரயில்வே தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் தேர்வுக்கு தயாராகும் இளைஞர்களுக்கு வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழிற்நெறி வழி காட்டும் மையத்தில் சிறந்த பயிற்றுநர்களை கொண்டு கட்டணமில்லா சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. எனவே இளைஞர்கள் பங்கேற்று பயனடையுமாறும், மேலும் விவரங்களுக்கு தொழில் நெறி வழிகாட்டும் மையத்தை தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.


