News February 2, 2026
செங்கல்பட்டு: கடலில் மூழ்கி அடுத்தடுத்து பலி

மஹாராஷ்டிராவை சேர்ந்தவர் நோயல்(23), ஜார்க்கண்ட்டை சேர்ந்தவர் ரித்தேஷ் குமார் (21), கோவில்பட்டியைச் சேர்ந்த முகேஷ் பிரவீன் (19)ஆகியோர் கானத்தூரில் உள்ள தனியார் மரைன் பொறியியல் கல்லுாரியில் படித்து வருகின்றனர். நேற்று 3 பேரும் கோவளம் கடற்கரைக்கு சென்று கடலில் இறங்கி குளித்துள்ளனர். அப்போது, அலையில் சிக்கி 3 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தார். கேளம்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News February 17, 2026
செங்கை புத்தக திருவிழா 20 ஆம் தேதி துவக்கம்

செங்கல்பட்டு மாவட்டம் மற்றும் செங்கை பாரதியார் மன்றம் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து 7 – வது ஆண்டு செங்கை புத்தக திருவிழா, மறைமலை நகர் நகராட்சி சமூக நலக்கூடத்தில் 20 முதல் 26 தேதி வரை நடக்கிறது. தினமும் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை இந்த புத்தக கண்காட்சி நடைபெற உள்ளது. இந்த திருவிழாவை அமைச்சர் அன்பரசன் துவக்கி வைக்க உள்ளார்.
News February 17, 2026
செங்கை: காவல் துறை சார்பில் விழிப்புணர்வு

செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை சார்பில், குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு அறிவுரை வெளியிடப்பட்டுள்ளது. இருசக்கர வாகனங்களில் பயணிக்கும் போது, ஓட்டுநர் மட்டுமின்றி உடன் வரும் குழந்தைகளும் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு விதிகளை கடைப்பிடிப்பதன் மூலம் விபத்துகளில் உயிர் சேதத்தை தவிர்க்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
News February 17, 2026
செங்கை: அனைத்து CERTIFICATES-ம் இனி Whatsapp-ல்!

செங்கை மக்களே.., பிறப்பு சான்றிதழ், வீட்டு வரி, குடிநீர் வரி, இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட 50 வகையான அரசு சேவைகள் மற்றும் சான்றிதழ்களை வீட்டிலிருந்தே பெறும் வசதியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. எங்கேயும் அலையாமல், வீட்டில் இருந்தே 7845252525 என்ற WHATSAPP எண்ணிற்கு ஒரு HI மட்டும் அனுப்பி, இந்த சேவைகளைப் பயன்படுத்தலாம். நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!


