News February 2, 2026

குமரி: சாலையோரம் அடையாளம் தெரியாத நபர் உயிரிழப்பு

image

குமரி, கடையாலுமூடு பகுதியில் பேருந்து நிறுத்தத்தில் இன்று காலை அடையாளம் தெரியாத நபர் மயங்கி கிடந்துள்ளார். இதை பார்த்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சோதனை செய்தபோது அந்த நபர் உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார் உயிரிழந்த கடந்த நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News February 18, 2026

13538 கர்ப்பிணி & பாலூட்டும் தாய்மார்களுக்கு இணை உணவு வழங்கல்

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் இறப்பு விகிதத்தை குறைக்க 13 ஆயிரத்து 538 தாய்மார்களுக்கு இணை உணவு வழங்கப்படுவதாக அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர். இதில் 7273 கர்ப்பிணிகளுக்கும் 6265 பாலூட்டும் தாய்மார்களுக்கும் நாள் ஒன்றுக்கு 150 கிராம் வீதம் மாதம் 7 முதல் 8 பாக்கெட்டுகள் இணை உணவு வழங்கப்படுகிறது என்றும் இதை போல் 6 மாதம் முதல் 2 வயது வரையிலான 23 776 குழந்தைகளுக்கு இணை உணவு வழங்கப்படுகிறது என்றனர்.

News February 18, 2026

குமரி: பெண்களுக்கு ரூ.5 லட்சம் வரை வட்டியில்லா கடன்.. APPLY

image

லக்பதி திதி யோஜனா திட்டத்தின் கீழ் பெண்கள் தொழில் தொடங்குவதற்கு ரூ.5 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படுகிறது. இதற்கு மகளிர் சுய உதவிக் குழுவில் உறுப்பினராக இருக்கும் 18 -50 வயதுக்குட்பட்ட பெண்கள் விண்ணப்பிக்கலாம். ஆதார், பான் கார்டு, வருமான சான்று, சுய உதவிக்குழு உறுப்பினர் சான்றிதழுடன் அருகிலுள்ள சுய உதவிக்குழு அலுவலங்கள் (அ)<> https://lakhpatididi.gov.in/ <<>>என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

News February 18, 2026

குமரி: ரூ.48,000 சம்பளத்தில் வங்கி வேலை ரெடி! APPLY

image

குமரி மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள 2050 Circle Based Officers (CBO) பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 21 – 30 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் பிப் 25க்குள் <>இங்கு க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு சம்பளம் ரூ.48,480 வழங்கப்படும். எழுத்து தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். இந்த பயனுள்ள தகவலை வேலை நாடும் நபர்களுக்கு SHARE செய்து உதவுங்க.

error: Content is protected !!