News February 2, 2026

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (பிப்.2) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.

Similar News

News February 18, 2026

தங்கம் விலை சரசரவென குறைந்தது

image

வரலாறு காணாத உச்சத்தை எட்டிய ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் சரிய தொடங்கி இருக்கிறது. கடந்த 15-ம் தேதி ஆபரணத் தங்கத்தின் விலை ₹1,16,480-க்கு விற்பனையான நிலையில், இன்று மாலை ₹1,13,840-ஆக விற்கப்படுகிறது. அதாவது, கடந்த 3 நாள்களில் மட்டும் சவரனுக்கு ₹2,640 குறைந்துள்ளது. சர்வதேச சந்தையில் தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருவதால், வரும் நாள்களிலும் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

News February 18, 2026

தேர்தலுக்காக மாநில சுயாட்சி பேசுகிறார்கள்: வானதி

image

அரசியலமைப்பு சட்டத்தை மாற்ற கோருவது, இந்தியர்களின் ஒற்றுமைக்கு திமுகவின் ‘திராவிட மாடல்’ எப்படி எதிரானது என்பதற்கு ஒரு சிறந்த உதாரணம் என வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார். 2004 -14 வரை மத்தியில் கூட்டணி ஆட்சியில் இருந்தபோது மாநில சுயாட்சி குறித்து திமுகவுக்கு ஏன் அக்கறை எழவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார். அத்துடன் தேர்தலுக்காகவே மாநில சுயாட்சி என்ற விவகாரத்தை CM எழுப்பியுள்ளதாக சாடியுள்ளார்.

News February 18, 2026

பிரபல நடிகை காலமானார்… REASON!

image

பிரபல பாலிவுட் நடிகை பிரவீனா தேஷ்பாண்டே (60) உடல்நலக் குறைவால் காலமானார். புற்றுநோய் பாதிப்பில் இருந்து அவர் மீண்டு வந்ததாக கூறப்பட்ட நிலையில், அவரின் மறைவு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரெடி, மும்பை மேரி ஜான் உள்பட பல படங்களிலும், The Family Man, Rocket Boys என வெப் சீரிஸ்களிலும் நடித்துள்ள இவர் டிவி சீரியல்களிலும் பிரபலமாக இருந்தார். இவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். RIP

error: Content is protected !!