News February 1, 2026

உப்புக்கு Expiry Date இருக்கா?

image

உப்பில்லாமல் உணவின் சுவை கெட்டுப்போகலாம், ஆனால் உப்பு எப்போதும் கெட்டுப்போகாது. சுத்தமான உப்பில் பாக்டீரியா மற்றும் கிருமிகளால் வளரவே முடியாது. அதில் இருக்கும் அயோடின் காலப்போக்கில் கரைந்துபோய், அதன் சத்து குறையுமே தவிர, மற்றப்படி உப்பு கெட்டுப்போகாது. எவ்வளவு நாள்களில் அந்த சத்து குறையும் என்பதை சுட்டிக்காட்டவே உப்பு பாக்கெட்டுகளில் Expiry Date கொடுக்கப்படுகிறது. பலருக்கும் தெரியாது SHARE THIS.

Similar News

News February 10, 2026

Chat GPT, கூகுளை மிரள வைத்த இந்திய நிறுவனம்

image

இந்தியாவின் ஸ்டார்ட் அப் நிறுவனமான சர்வம் ஏஐ, Chat GPT, Gemini-ஐ விட பெர்பாமன்ஸில் அசத்தியுள்ளது. நுட்பமான ஆவணங்கள் மற்றும் கையெழுத்துகளை சரியாக அடையாளம் காண்பதில், மற்ற AI-களைவிட சர்வம் அசத்தியுள்ளது. அதேபோல் இந்திய மொழிகளின் அனைத்து வட்டாரங்களையும் சரியாக புரிந்துகொள்ளும் திறனிலும் சர்வம் கலக்குகிறது. இன்னும் சில மாற்றங்கள் கொண்டு வந்தால் வருங்காலத்தில் சர்வம் AI பெரிய மாற்றத்தை ஏற்படுத்தலாம்.

News February 10, 2026

பள்ளி மாணவியை திருமணம் செய்த டீச்சர்

image

பாடத்தை சொல்லித்தர வேண்டிய ஆசிரியர் செய்த காரியம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானாவில் 10-ம் வகுப்பு மாணவியை ஏமாற்றி, அதே பள்ளியில் இயற்பியல் ஆசிரியரான மைத்தீன்(27) திருமணம் செய்துள்ளார். சிறுமியின் நடத்தையில் தெரிந்த மாற்றத்தையும், கழுத்தில் இருந்த நகையையும் கவனித்த குடும்பத்தினர் விசாரித்ததில் உண்மை வெளிவந்துள்ளது. தற்போது, ஆசிரியர் போக்சோ வழக்கில் கைதாகியுள்ளார்.

News February 10, 2026

விஜய் CM ஆவாரா? நடிகர் சிவக்குமார் பதில்

image

விஜய்யின் அரசியல் வருகை குறித்து திரைப்பிரபலங்கள் பெரிதாக வாய் திறப்பதில்லை. இந்நிலையில் விஜய்யின் முதல்வர் கனவு நிறைவேறுமா என்ற கேள்விக்கு நடிகர் சிவக்குமார் ஒரேவரியில் பதில் அளித்துள்ளார். விஜய் முதல்வராக வந்தே ஆகணும் என மக்கள் நினைத்தால் வந்துவிடுவார் என அவர் தெரிவித்துள்ளார். சிவக்குமாரின் கருத்தை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

error: Content is protected !!