News February 1, 2026

திருவாரூர்: ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

திருவாரூர் மக்களே உங்கள் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது, தேவையான பொருட்களுக்கு பதிலாக மற்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது போன்ற செயல்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டால் 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவகத்தில் புகார் செய்யலாம். இதனை SHARE செய்து மற்றவர்களுக்கும் தெரியபடுத்துங்க.

Similar News

News February 9, 2026

திருவாரூர்: தலை நசுங்கி பெண் பலி

image

நாகை மாவட்டம், துளசாபுரத்தை சேர்ந்த நடராஜன் (68). இவர் நேற்று மதியம் தனது மனைவி கலைச்செல்வியுடன் (65) டூவீலரில் திருத்துறைப்பூண்டி அருகே இ.சி.ஆர் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த அரசு பஸ் மோதியதில், இருவரும் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளனர். இதில் கலைச்செவியின் தலையில் பேருந்தின் முன் சக்கரம் ஏறியதில், அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

News February 9, 2026

திருவாரூர்: மனைவியிடம் அத்துமீறியவர் அடித்து கொலை

image

திருவாரூர் மாவட்டம், கர்ணாவூர் கிராமத்தை சேர்ந்தவர் கலையரசன் (37). ஒலிபெருக்கி நிலையம் நடத்தி வந்த இவரிடம் அருள்தாஸ் (40) என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கலையரசன் மனைவிக்கு அருள்தாஸ் பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறப்படுகிறது. இதையறிந்த கலையரசன் ஆத்திரத்தில் இரும்பு கம்பியால் அருள்தாசை தலையில் அடித்ததில், அவர் உயிரிழந்தார். இதையடுத்து பெருகவாழ்ந்தான் போலீசார் அவரை கைது செய்தனர்.

News February 9, 2026

திருவாரூர் இரவு ரோந்து பணி காவலர்கள் அறிவிப்பு

image

திருவாரூர் மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு, உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!