News May 8, 2024
தமிழ்ப் புதல்வன் திட்டத்தில் ₹1000 பெறுவது எப்படி?

தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கீழ், அரசுப் பள்ளியில் 6-12ஆம் வகுப்பு வரை படித்த மாணவர்களுக்கு நடப்பு கல்வியாண்டு முதல் தமிழக அரசு ₹1000 வழங்க உள்ளது. இந்தத் தொகையை பெற, +2 முடித்த மாணவர்கள், பொறியியல், கலை & அறிவியல் போன்ற உயர்க்கல்வி படிப்புகளில் சேர வேண்டும். இதையடுத்து விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு, பாடப் புத்தகம், பொது அறிவு நூல்கள் போன்றவற்றை வாங்க தமிழக அரசு மாதந்தோறும் ₹1000 வழங்கும்.
Similar News
News September 24, 2025
BREAKING: பீலா வெங்கடேசன் காலமானார்

TN அரசின் எரிசக்தி துறை முதன்மை செயலாளர் பீலா வெங்கடேசன்(56) IAS காலமானார். உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் ஹாஸ்பிடலில் கடந்த 2 மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், சற்றுமுன் உயிர் பிரிந்தது. தூத்துக்குடியை சேர்ந்த இவர் செங்கல்பட்டில் துணை ஆட்சியராக பணியை தொடங்கி அரசின் பல்வேறு துறைகளில் செயலாளராகவும் இருந்தவர். கொரோனா காலத்தில் சுகாதாரத்துறை செயலாளராக பணிபுரிந்தது குறிப்பிடத்தக்கது.
News September 24, 2025
BREAKING: முடிவை மாற்றினார் செங்கோட்டையன்!

சென்னையில் TTV தினகரன், OPS-யை சந்திக்கவிருந்த <<17817923>>செங்கோட்டையன்<<>> கடைசி நேரத்தில் தனது முடிவை மாற்றியதாக கூறப்படுகிறது. தலைமைக்கு கெடு விதித்த விவகாரத்தில் ஏற்கெனவே அமைப்பு செயலாளர், மாவட்ட செயலாளர் பதவிகள் பறிக்கப்பட்டன. இந்நிலையில், அவர் டிடிவி, சசிகலா, OPS-யை சந்தித்தால், கட்சியிலிருந்து நீக்க EPS திட்டமிட்டதாக தெரிகிறது. அதை தவிர்க்கவே அவர் டிடிவியை இன்று சந்திக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
News September 24, 2025
எலான் மஸ்க் தந்தை மீது பாலியல் குற்றச்சாட்டு

எலான் மஸ்க்கின் தந்தை எரோல் மஸ்க், தனது 5 குழந்தைகள் மற்றும் வளர்ப்பு குழந்தைகளை 1993 முதல் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக புகார் எழுந்துள்ளது. தனது உள்ளாடைகளை தவறான எண்ணத்தில் கையாண்டதாக வளர்ப்பு மகள் ஒருவர் குற்றஞ்சாட்டியுள்ளார். ஆனால், இது பொய்யான குற்றச்சாட்டு என்று எரோல் மஸ்க் மறுத்துள்ளார். இதை வைத்து தன்னை மிரட்டி சில குடும்ப உறுப்பினர்கள் பணம் பறிக்க முயல்வதாகவும் தெரிவித்துள்ளார்.