News February 1, 2026
ஏப்ரல் 1-ல் புதிய வருமான வரிச்சட்டம் அமல்

புதிய வருமான வரிச்சட்டம் வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என பட்ஜெட்டில் அறிவிக்கபட்டுள்ளது. மேலும் வருமான வரி தாக்கல் செய்யப்படும் முறை எளிதாக்கப்படும் என்றும் ITR1, ITR 2 தாக்கலுக்கான அவகாசம் நீட்டிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் வாகன விபத்துக்கான இழப்பீட்டுக்கு வரி விலக்கு அளிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
Similar News
News February 9, 2026
PM மோடிக்கு தைரியமில்லை: பெண் MP-க்கள் கடிதம்

PM மோடியை தாக்க காங்கிரஸ் பெண் MP-க்கள் முயற்சித்ததாக, சபாநாயகர் ஓம் பிர்லா வைத்த குற்றச்சாட்டு பெரும் விவாதத்தை கிளப்பியது. இந்நிலையில் இது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு என காங். பெண் MP-க்கள் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதியுள்ளனர். மேலும் எதிர்கட்சிகளின் கேள்விகளை எதிர்கொள்ள தைரியமில்லாமலேயே PM அவைக்கு வரவில்லை என்றும் இது ஒரு பயத்தின் வெளிப்பாடு எனவும் பெண் MP-க்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
News February 9, 2026
திமுகவில் இணையும் அதிமுக முன்னாள் அமைச்சர் நீலோபர்

வாணியம்பாடி அதிமுகவைச் சேர்ந்த Ex அமைச்சர் நீலோபர், திமுகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கட்சிக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டதாக 2021-ல் அதிமுகவில் இருந்து அவர் நீக்கப்பட்டார். தற்போது, அதிமுக நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்று வந்தாலும், கே.சி.வீரமணிக்கே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறதாம். இதனால், பிப்.14 அன்று ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைய அவர் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
News February 9, 2026
டிகிரி போதும்.. ₹56,100 சம்பளம்!

UPSC-ல் IAS, IPS, ரயில்வே, தபால் துறைகளின் மூலம் 933 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன *வயது: 21- 32 *கல்வித்தகுதி: ஏதாவது ஒரு டிகிரி *தேர்ச்சி முறை: Preliminary and Main Examination & Personality Test *சம்பளம்: ₹56,100- ₹1,32,000 வரை *வரும் 24-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் *ஆன்லைனில் விண்ணப்பிக்க <


