News February 1, 2026

நிர்மலா சீதாராமனின் புடவை சொல்லும் செய்தி!

image

ஒவ்வொரு முறை மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யும் போது, ஒவ்வொரு மாநிலத்தை பிரதிபலிக்கும் வகையில் FM நிர்மலா சீதாராமன் புடவை அணிவார். அந்த வகையில் இந்த முறை தமிழகத்தை பிரதிபலிக்கும் விதமாக அவர், காஞ்சிபுரம் பட்டுப்புடவையை உடுத்தியுள்ளார். ஊதா நிற காஞ்சிபுரம் பட்டுப்புடவையில், வெளிர் தங்க- பழுப்பு நிறத்தில் சிறு கட்டங்கள் உள்ளன. மேலும், காபி பிரவுன் பார்டரும் புடவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar News

News February 12, 2026

டிகிரி போதும்.. வங்கியில் ₹48,000 சம்பளம்!

image

தமிழகம் & பாண்டிச்சேரியில் SBI வங்கியில் 165 Circle Based Officers காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன *வயது: 21- 30 *கல்வித்தகுதி: Engineering, Medicine, Cost accounting, Chartered accounting *தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, நேர்காணல் & உள்ளூர் மொழித் திறன் தேர்வு * பிப்.18-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் *சம்பளம்: ₹48,480 *ஆன்லைனில் விண்ணப்பிக்க <>இங்கே <<>>கிளிக் செய்யவும். SHARE IT.

News February 12, 2026

வாக்காளர்களே ரெடியா.. ECI அறிவித்தது

image

தமிழக தேர்தல் தேதி அறிவிக்கப்படும் வரை, EVM & VVPAT இயந்திரம் பயன்படுத்துவது குறித்து வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என ECI அறிவித்துள்ளது. இதற்காக கலெக்டர், சப்-கலெக்டர் & வருவாய் கோட்ட அலுவலர் அலுவலகங்களில் செயல்முறை விளக்க மையங்கள் மற்றும் நடமாடும் செயல் விளக்க வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்காளர்களே பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

News February 12, 2026

யார் துரோகி என்று மக்களுக்கு தெரியும்: GK மணி

image

<<19100878>>முக்கியமான துரோகி<<>> என அன்புமணி வைத்த விமர்சனத்துக்கு GK மணி பதிலடி கொடுத்துள்ளார். ராமதாஸுடன் இருப்பதால் துரோகிகள் என்று அநாகரிகமாக, அவதூறாக பேசுவது நல்லதல்ல என எச்சரித்துள்ளார். தான் யாருக்கும் மனதார கெடுதல் நினைப்பவன் அல்ல என கூறிய அவர், துரோகியாக இருந்திருந்தால் ராமதாஸுடன் இத்தனை ஆண்டுகள் பயணித்திருக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார். யார் துரோகி என்று மக்களுக்கு தெரியும் என்றும் கூறியுள்ளார்.

error: Content is protected !!