News May 8, 2024
‘ஒட்டு மா’ மரங்களை உருவாக்கிய முகலாயர்கள்

இந்திய வரலாற்றில் முகலாயர்களையும் மாம்பழங்களையும் பிரிக்க முடியாது என்றே சொல்லலாம். ‘மாம்பழங்களின் பொற்காலம்’ என வர்ணிக்கப்படும் முகலாயர்களின் ஆட்சியில்தான், பல புதிய மா ரகங்களை உருவாக்க ஆராய்ச்சிகள் நடந்துள்ளன. அந்த வகையில், முதிர்ச்சி பெற்ற மாமரத்தின் கிளைகளை வெட்டி, அதில் வேறு வகையான சிறு மா கன்றை ஒட்டி வளர்த்து, புதிய மாங்கனிகளை விளைக்கும் ‘ஒட்டு மா’ என்ற மர உருவாக்க முறை நடைமுறைக்கு வந்தது.
Similar News
News September 24, 2025
கரூர்: அரசு சீருடை பணியாளர் தேர்வுக்கான பயிற்சி

கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் அரசு சீருடை பணியாளர் தேர்வுக்கான பயிற்சி 30.09.2025 முதல் நடைபெறவுள்ளது. இதில் சேர விரும்பும் மனுதாரர்கள், 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் ஆதார் அட்டை நகலுடன் நாளை (25.09.2025) காலை 10.00 மணிக்கு மையத்தில் நேரில் சென்று பதிவு செய்யுமாறு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
News September 24, 2025
ஆசிய கோப்பை: இந்தியா பேட்டிங்

ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில் இந்தியாவுக்கு எதிரான மோதலில், டாஸ் வென்ற வங்கதேச அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது. சூப்பர் 4 சுற்றில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ள நிலையில், இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி ஏறக்குறைய இறுதிப்போட்டிக்கு முன்னேறிவிடும். பலம் வாய்ந்த இந்தியாவை வங்கதேசம் வீழ்த்துவது கடினமான காரியமே. Head to Head = 17 போட்டிகள், வெற்றி = 16 இந்தியா, 1 வங்கதேசம்.
News September 24, 2025
TTV-யை சந்திக்கவில்லை என செங்கோட்டையன் மறுப்பு

TTV தினகரனை, கே.ஏ.செங்கோட்டையன் சந்தித்து பேசியதாக வெளியான தகவலுக்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். தனியார் TV-க்கு தொலைபேசி வாயிலாக பேசிய அவர், சொந்த வேலையாக சென்னை வந்ததாகவும், தான் யாரையும் சந்திக்கவில்லை எனவும் விளக்கம் அளித்துள்ளார். அதேநேரம், அதிமுக ஒன்றிணைய வேண்டும் எனவும், இணைந்து 2026 தேர்தலை சந்தித்தால் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெல்லலாம் என்பது தனது விருப்பம் எனவும் கூறியுள்ளார்.