News May 8, 2024

சாம் பிட்ரோடா ராஜினாமா

image

அயலக அணி தலைவர் உள்பட காங்கிரஸ் கட்சியின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் ராஜினாமா செய்வதாக, சாம் பிட்ரோடா தெரிவித்துள்ளார். இந்தியர்களின் நிறம் குறித்து, சமீபத்தில் அவர் கூறிய கருத்து சர்ச்சையானது. இதனால், தனது பதவியை ராஜினாமா செய்வதாக கார்கேவுக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். முன்னதாக அவர் பேச்சுக்கு, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

Similar News

News September 24, 2025

BREAKING: முடிவை மாற்றினார் செங்கோட்டையன்!

image

சென்னையில் TTV தினகரன், OPS-யை சந்திக்கவிருந்த <<17817923>>செங்கோட்டையன்<<>> கடைசி நேரத்தில் தனது முடிவை மாற்றியதாக கூறப்படுகிறது. தலைமைக்கு கெடு விதித்த விவகாரத்தில் ஏற்கெனவே அமைப்பு செயலாளர், மாவட்ட செயலாளர் பதவிகள் பறிக்கப்பட்டன. இந்நிலையில், அவர் டிடிவி, சசிகலா, OPS-யை சந்தித்தால், கட்சியிலிருந்து நீக்க EPS திட்டமிட்டதாக தெரிகிறது. அதை தவிர்க்கவே அவர் டிடிவியை இன்று சந்திக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

News September 24, 2025

எலான் மஸ்க் தந்தை மீது பாலியல் குற்றச்சாட்டு

image

எலான் மஸ்க்கின் தந்தை எரோல் மஸ்க், தனது 5 குழந்தைகள் மற்றும் வளர்ப்பு குழந்தைகளை 1993 முதல் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக புகார் எழுந்துள்ளது. தனது உள்ளாடைகளை தவறான எண்ணத்தில் கையாண்டதாக வளர்ப்பு மகள் ஒருவர் குற்றஞ்சாட்டியுள்ளார். ஆனால், இது பொய்யான குற்றச்சாட்டு என்று எரோல் மஸ்க் மறுத்துள்ளார். இதை வைத்து தன்னை மிரட்டி சில குடும்ப உறுப்பினர்கள் பணம் பறிக்க முயல்வதாகவும் தெரிவித்துள்ளார்.

News September 24, 2025

ஆசிய கோப்பை: இந்தியா பேட்டிங்

image

ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில் இந்தியாவுக்கு எதிரான மோதலில், டாஸ் வென்ற வங்கதேச அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது. சூப்பர் 4 சுற்றில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ள நிலையில், இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி ஏறக்குறைய இறுதிப்போட்டிக்கு முன்னேறிவிடும். பலம் வாய்ந்த இந்தியாவை வங்கதேசம் வீழ்த்துவது கடினமான காரியமே. Head to Head = 17 போட்டிகள், வெற்றி = 16 இந்தியா, 1 வங்கதேசம்.

error: Content is protected !!