News May 8, 2024
உச்சகட்டத்தை எட்டிய மோதலால் பொதுமக்கள் அவதி

ஏர் இந்தியா ஊழியர்களுக்கும், அந்நிறுவன தலைமையான டாடா நிறுவனத்துக்கும் இடையேயான பிரச்சனை உச்சம் தொட்டுள்ளது. ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனங்கள் இணைய உள்ளதாக செய்திகள் வந்ததால், ஏர் இந்தியா பணியாளர்கள், டாடாவுக்கு எதிராக போராட்டத்தில் குதித்தனர். இன்று, ஏர் இந்தியாவின் சுமார் 300 ஊழியர்கள் விடுப்பு எடுத்ததால் 80 விமானங்கள் ரத்தானது. ஊழியர்களிடம் டாடா பேச்சுவார்த்தையை தொடங்க உள்ளது.
Similar News
News September 24, 2025
ஆசிய கோப்பை: இந்தியா பேட்டிங்

ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில் இந்தியாவுக்கு எதிரான மோதலில், டாஸ் வென்ற வங்கதேச அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது. சூப்பர் 4 சுற்றில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ள நிலையில், இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி ஏறக்குறைய இறுதிப்போட்டிக்கு முன்னேறிவிடும். பலம் வாய்ந்த இந்தியாவை வங்கதேசம் வீழ்த்துவது கடினமான காரியமே. Head to Head = 17 போட்டிகள், வெற்றி = 16 இந்தியா, 1 வங்கதேசம்.
News September 24, 2025
TTV-யை சந்திக்கவில்லை என செங்கோட்டையன் மறுப்பு

TTV தினகரனை, கே.ஏ.செங்கோட்டையன் சந்தித்து பேசியதாக வெளியான தகவலுக்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். தனியார் TV-க்கு தொலைபேசி வாயிலாக பேசிய அவர், சொந்த வேலையாக சென்னை வந்ததாகவும், தான் யாரையும் சந்திக்கவில்லை எனவும் விளக்கம் அளித்துள்ளார். அதேநேரம், அதிமுக ஒன்றிணைய வேண்டும் எனவும், இணைந்து 2026 தேர்தலை சந்தித்தால் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெல்லலாம் என்பது தனது விருப்பம் எனவும் கூறியுள்ளார்.
News September 24, 2025
CBSE பொதுத்தேர்வு தேதி வெளியானது

10, 12-ம் வகுப்பு CBSE மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அடுத்த ஆண்டு பிப்.17-ல் தொடங்கி ஜூலை 15-ல் முடிவடையும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த தேர்வை, இந்தியா உள்பட 26 நாடுகளில் இருந்து 45 லட்சம் மாணவர்கள் எழுதுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஒவ்வொரு தேர்வும் நடந்த 12-வது நாளில் விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கும்.