News February 1, 2026
தருமபுரி: இரவு ரோந்துப் பணி ஆய்வாளர்கள் விவரம்

தருமபுரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று (ஜன.31) இரவு முதல் இன்று காலை 6 மணி வரை ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆய்வாளர் ராஜ்குமார் தலைமையில், அதியமான்கோட்டை பகுதியில் பச்சமுத்து தொப்பூரில் பிரபாகரன் , மதிகோன்பாளையத்தில் சிவகுமார் ஆகியோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். மேலும், பொதுமக்கள் அவசர உதவிக்கு இவர்களை அணுகலாம். ஷேர் பண்ணுங்க!
Similar News
News February 18, 2026
தருமபுரியில் வாலிபர் துடிதுடித்து பலி!

பென்னாகரம், மங்கம்பட்டியை சேர்ந்தவர் ராகேஷ் (19). இவர் உத்தனப்பள்ளியில் வேலை செய்து வந்தார். உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட அவர் சிகிச்சை பெற்றும் குணமாகத்தால் மனமுடைந்து காணப்பட்டார். இதனால் விஷம் குடித்து தற்கொலை முயற்சி செய்த இவர், கிருஷ்ணகிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி ராகேஷ் இறந்தார். இது குறித்து உத்தனப்பள்ளி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News February 18, 2026
தருமபுரி: மாணவன் அதிர்ச்சி முடிவு! திடுக்கிடும் பின்னணி!

தருமபுரி மாவட்டம், இருமத்தூர் அருகே உள்ள அரசு பள்ளியில் பயிலும் 12-ஆம் வகுப்பு மாணவர் ஒருவரை, அங்குள்ள உடற்கல்வி ஆசிரியர் குச்சியால் சரமாரியாக தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான அந்த மாணவர், தற்கொலை செய்துகொள்ளும் நோக்கில் அரளி விதையை அரைத்துக் குடித்துள்ளார். இந்நிலையில் மாணவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
News February 18, 2026
தருமபுரியில் நடுரோட்டில் பயங்கரம்!

ஒட்டன்சத்திரத்திற்கு சேலத்தை சேர்ந்த கார்த்திகேயன் (37) லாரியில் வெங்காய லோடு ஏற்றி வந்தார். நேற்று (பிப்.17) அதிகாலை தொப்பூர் கணவாய் இரட்டை பாலத்தை கடந்தபோது லாரி கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் படுகாயம் அடைந்த 2 பேரும் தருமபுரி அரசு மருத்துவமணியில் சிகிட்ச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து தோப்பூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


