News January 31, 2026

பிப்ரவரியில் வானில் நிகழும் அற்புதங்கள்!

image

பிப்ரவரி மாதம் வானில் ஏராளமான நிகழ்வுகள் நடைபெற உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. பிப்ரவரி 1 – பனி நிலவு, பிப்ரவரி 17 – சூரிய கிரகணம், பிப்ரவரி 18 – மிக மெல்லிய பிறை நிலவு புதன் கோளுக்கு அருகில் தோன்றும், பிப்ரவரி 19 – சனி கிரஹம் நிலவுக்கு அருகில் தோன்றும், பிப்ரவரி 28 – புதன், வெள்ளி, வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகிய கிரகங்கள் வான்வெளியில் ஒரு வில் போன்ற வடிவில் அணிவகுக்கும்.

Similar News

News February 17, 2026

‘அச்சம் இல்லை’ என காங்., தலைமையை சீண்டிய MP

image

கூட்டணி விவகாரத்தில் தலைமையின் ஆணையை மீறி கருத்து கூறி வரும் மாணிக்கம் தாகூர் மீது நடவடிக்கை எடுக்கப் பரிந்துரைத்திருப்பதாக <<19157591>>செல்வப்பெருந்தகை<<>> கூறினார். இந்நிலையில், தனது X பக்கத்தில் ‘அச்சம் இல்லை, அச்சம் இல்லை, அச்சமென்ப தில்லையே’ என சிரிப்பு ஸ்மைலியுடன் மாணிக்கம் தாகூர் சற்றுமுன் பதிவிட்டுள்ளார். இது, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல தலைமையை சீண்டும் செயல் என சிலர் கமெண்ட் செய்து வருகின்றனர்.

News February 17, 2026

FLASH: கார்கள் விலை ₹70,000 குறைந்தது.. இன்ப அதிர்ச்சி

image

கார் வாங்க திட்டமிட்டுள்ளவர்களுக்கு இந்த பிப்ரவரியில் ஜாக்பாட் தள்ளுபடியை கார் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. குறைந்தபட்சம் ₹30,000 முதல் அதிகபட்சமாக ₹73,000 வரை சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவை என்னென்ன மாடல் கார்கள், அதன் விலை என்ன, எவ்வளவு சலுகை வழங்கப்பட்டுள்ளது என்பதை மேலே உள்ள போட்டோக்களை வலப்பக்கமாக SWIPE செய்து பாருங்கள். அப்படியே கார் வாங்க நினைத்த உங்களது நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க.

News February 17, 2026

சிவராத்திரி விழாவில் முப்படை அதிகாரிகள் எதற்கு?

image

கோவை ஈஷா சிவராத்திரி விழாவில் ராஜ்நாத் சிங் மற்றும் பல்வேறு மாநில அமைச்சர்கள் பங்கேற்றது நாட்டின் மதச்சார்பின்மைக்கு எதிரானது என CPI வீரபாண்டியன் விமர்சித்துள்ளார். மேலும், முப்படை அதிகாரிகள் சீருடையுடன் சிவராத்திரி விழாவில் கலந்துகொண்டது கண்டனத்திற்குரியது எனவும் சாடியுள்ளார். மத்திய அரசின் அழுத்தத்தின் காரணமாகவே அவர்கள் கலந்துகொண்டதாக கூறப்படுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

error: Content is protected !!