News January 31, 2026
தாமதமாகும் ‘ஜனநாயகன்’ ரிலீஸ்.. SORRY கேட்ட விஜய்

‘ஜன நாயகன்’ பட விவகாரம் குறித்து முதல்முறையாக விஜய் வெளிப்படையாக பேசியிருக்கிறார். ஜன நாயகன் படத்தை ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் எதிர்கொள்ளும் கஷ்டங்கள் தன்னை மிகவும் வேதனைப்படுத்துவதாகவும், இதற்காக உண்மையாகவே வருத்தம் (SORRY) தெரிவித்து கொள்வதாகவும் விஜய் கூறியுள்ளார். ஜன நாயகன் தனது கடைசி படம் என்பதால், பல்வேறு பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக அவர் ஏற்கெனவே கூறியிருந்தார்.
Similar News
News February 18, 2026
நெதர்லாந்தை அடித்து நொறுக்க காத்திருக்கும் இந்தியா

ஏற்கெனவே சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய இந்தியா வரும் 26-ம் தேதி சேப்பாக்கத்தில் ஜிம்பாப்வேவை எதிர்கொள்கிறது. இந்நிலையில் தனது கடைசி லீக் போட்டியில் இன்று நெதர்லாந்துடன், இந்தியா மோத உள்ளது. வழக்கம் போல் இந்த போட்டியில் இந்தியா ஆதிக்கம் செலுத்திய தயாராக உள்ளது. இந்த ஆட்டத்தில், இதுவரை போதிய வாய்ப்பு கிடைக்காத வீரர்கள் களம் காண்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
News February 18, 2026
கண் கருவளைய பிரச்னையா? இதை ட்ரை பண்ணுங்க..

மன அழுத்தம், தூக்கமின்மை, மரபணு காரணங்களால் கண்களைச் சுற்றி கருவளையம் ஏற்படுகிறது. இதை வீட்டு வைத்தியங்கள் மூலமாகவே சரிசெய்ய முடியும் என நிபுணர்கள் கூறுகின்றனர். ▶வெள்ளரிக்காய்: தினமும் இரவில் இதை வைப்பது கருவளையத்தைப் போக்க உதவும். ▶ஐஸ் க்யூப் மசாஜ்: இது இரத்த நாளங்களை சுருக்கி, வீக்கத்தைக் குறைத்து கருவளையத்தைக் குறைக்கும். ▶கற்றாழை ஜெல்: சருமத்திற்கு பொலிவூட்டி, கருவளையங்களைக் குறைக்கும்.
News February 18, 2026
மக்களுக்கு 5 பைசாவுக்கு கூட உதவாத பட்ஜெட்: தவெக

தமிழகத்துக்கு எந்த நலனையும் திமுக செய்யவில்லை என்பது இடைக்கால பட்ஜெட்டின் மூலம் தெரிவதாக CTR நிர்மல் குமார் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், இது தமிழக அரசின் பட்ஜெட் போன்று இல்லை, திமுகவின் குடும்ப பட்ஜெட் மாதிரி இருப்பதாகவும் விமர்சித்துள்ளார். இந்த பட்ஜெட்டில் விவசாயிகளின் வளர்ச்சிக்காக எதுவும் இல்லை எனவும், ஒட்டுமொத்தமாக TN மக்களுக்கு 5 பைசாவுக்கு கூட இந்த பட்ஜெட் உதவாது எனவும் சாடியுள்ளார்.


