News January 31, 2026
தங்கம் விலை மேலும் குறைகிறது

தங்கம் விலை ஏறிய வேகத்தில் <<19009659>>சரசரவென குறைந்து வருவதால்<<>> தேசிய அளவில் முக்கிய விவாதமாக மாறியுள்ளது. X தளத்தில் #GoldPrice ஹேஷ்டேக் முதலிடத்தில் டிரெண்டாகி வருகிறது. இந்திய சந்தையில் 2 நாள்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ₹15,200 குறைந்துள்ளது. டாலர் பணவீக்கத்தை கட்டுப்படுத்த அமெரிக்க எடுத்துள்ள முயற்சிகளால் வரும் நாள்களில் தங்கம் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதாக வல்லுநர்கள் கணித்துள்ளனர்.
Similar News
News February 9, 2026
பிள்ளையார் சிலையை உடைத்த பெரியாரால்.. திருமா பேச்சு

நமது கஷ்டங்களை ஒரு சக்தியிடம் முறையிடுவதற்காக முன்னோர்கள் உருவாக்கிய கடவுள் வழிபாட்டை நம்மை போன்ற சாமானியர்கள் பின்பற்றுகிறார்கள். ஆனால், கடவுள் இல்லை என கூறி 95 வயது வரை வாழ்ந்த பெரியாரால் பிள்ளையார் சிலையை உடைத்த பின்னும் எப்படி மன நிம்மதியுடன் வாழ முடிந்தது என கேள்வி எழுப்பினார். ஏனென்றால், அவர் சமூகத்தில் உள்ள வளையங்களுக்குள் தன்னை அடைக்கவில்லை என்ற விளக்கத்தையும் திருமா அளித்தார்.
News February 9, 2026
உதடு இப்படி இருக்கா? அப்போ அசால்ட்டா இருக்காதீங்க!

குளிர்காலத்தில் உதடுகள் வறண்டு போவதும், வெடிப்புகள் ஏற்படுவதும் பொதுவானது. ஆனால் உடலை நன்கு நீரேற்றத்துடன் வைத்துக் கொண்டு, லிப் பாம்களை பயன்படுத்தியும், உதடு வெடிப்புடன் இருக்கிறதா? அப்படி இருந்தால் உடலில் இரத்த ஓட்டம் மோசமாக உள்ளது என அர்த்தம். அத்துடன் கால் வீக்கம், உடல் சோர்வு போன்ற அறிகுறிகளையும் சந்தித்தால், இதய ஆரோக்கியம் மோசமாக உள்ளதற்கான அறிகுறி என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர்.
News February 9, 2026
படுத்த படுக்கையாக இருந்த நடிகை முமைத் கான்

2016-ல் நிகழ்ந்த விபத்தில் மூளை நரம்புகள் பாதிக்கப்பட்டு 15 நாள்கள் கோமாவில் இருந்ததாக நடிகை முமைத் கான் வருத்தத்துடன் கூறியுள்ளார். ‘என் செல்ல பேரு ஆப்பிள்’ பாடலில் விஜய்யுடன் கலக்கிய இவர், கோமாவுக்கு பிறகு 8 ஆண்டுகள் செயலிழந்து இருந்ததாகவும் வேதனைப்பட தெரிவித்துள்ளார். தற்போது ஓரிரு படங்களில் கமிட்டாகியுள்ளதாக கூறிய அவர், இனி முடிந்ததை செய்யலாம் என சினிமாவுக்கு மீண்டும் வந்துள்ளேன் என்றார்.


