News January 31, 2026

தருமபுரி: தூக்கில் தொங்கி துடிதுடித்து பலி!

image

எர்ரப்பட்டியை சேர்ந்த டிராக்டர் டிரைவர் மணிகண்டன் (20). இவருக்கு வயிற்று வலி ஏற்பட்டு வந்த நிலையில் 28-ந் தேதி மாலை வெகு நேரமாகியும் இவரது வீட்டின் கதவை திறக்காமல் இருந்துள்ளது. உறவினர்கள் வந்து பார்த்த போது மின்விசிறியில் மணிகண்டன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து பெரும்பாலை போலீசார் உடலை கைப்பற்றி தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

Similar News

News February 3, 2026

வங்கி கடன் உதவிகளை வழனாகிய ஆட்சியர்!

image

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக அதியன் கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட தொழில் மையம் சார்பில் கலைஞர் கைவினைத் திட்டத்தின் கீழ் வங்கி கடன் உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் சதீஸ் நேற்று
(ஜன.2) வழங்கினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ரூபன் சங்கர் ராஜ் ஆகியோர் இருந்தனர்.

News February 3, 2026

ஆட்சியர் அலுவலகத்தில் மனுக்களை பெற்ற ஆட்சியர்!

image

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக அதியன் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று (ஜன.2) நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் தரெ.சதீஸ் தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில் மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ரூபன் சங்கர் ராஜ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் கவிதா, தனித்துணை ஆட்சியர் சபாதி உள்ளிட்ட முக்கிய அலுவலர்கள் கோரிக்கைகளை பெற்ற்றனர்.

News February 3, 2026

அறிவித்தார் தருமபுரி கலெக்டர்!

image

தமிழக அரசின் கலை பண்பாட்டுத் துறையின் சார்பில் தருமபுரி மாவட்ட பள்ளி மாணவ, மாணவியருக்கு கலைப்போட்டிகள் நடைபெற உள்ளது. இதில் தருமபுரி மாவட்டம் அப்பாவு நகர் பகுதியில் அமைந்துள்ள நகராட்சி துவக்கப்பள்ளி வளாகத்தில வரும் 14-ம் தேதி அன்று மாவட்ட அளவிலான கலைப்போட்டிகள் நடைபெற உள்ளது. மேலும் விவரங்களுக்கு: 9486523986 எண்ணில் தொடர்புக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் சதிஸ் அறிவித்து உள்ளார்.

error: Content is protected !!