News January 31, 2026
மாஸ் காட்டிய மங்காத்தா.. விஜய் சாதனை முறியடிப்பு!

அஜித்தின் கரியரில் மெகா ஹிட் படமாக அமைந்த ‘மங்காத்தா’, ரீ-ரிலீஸிலும் வசூலை குவித்து வருகிறது. அவரது ரசிகர்கள் தியேட்டர்களை திருவிழாக் கோலமாக்கி வருகின்றனர். முதல் 5 நாள்களில் இப்படம் ₹17.5 கோடி வசூலித்து இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ரீ-ரிலீஸ் வசூலில் விஜய்யின் ‘கில்லி’ பட வசூலை ‘மங்காத்தா’ முறியடித்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மங்காத்தா VS கில்லி… உங்க ஃபேவரெட் எது?
Similar News
News February 13, 2026
தங்கம் விலை அதிரடியாக குறைந்தது

தங்கம் விலை நேற்று சவரனுக்கு ₹1,520 குறைந்து நகைப் பிரியர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்நிலையில், சர்வதேச சந்தையில் தங்கம் விலை 1 அவுன்ஸ் $133.71 ஆக அதிரடியாக குறைந்து $4,939.78
-க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலையும் $7.44 குறைந்து $75.61 ஆக சரிந்துள்ளது. இதனால் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை மிகப்பெரிய அளவில் குறையும் என கூறப்படுகிறது. So ரெடியா இருங்க மக்களே..
News February 13, 2026
சீட் விவகாரத்தில் இறங்கி வருகிறாரா பிரேமலதா?

2011-ல் எதிர்க்கட்சியாக இருந்த தேமுதிகவின் வாக்கு சதவீதம், அதன் பிறகு படிப்படியாக குறையத் தொடங்கியது. தொடர் தோல்வியை சந்திக்கும் தேமுதிகவை பழைய நிலைமைக்கு கொண்டு வர பிரேமலதா சீட் விவகாரத்தில் உறுதியாக இருந்தார். ஆனால், தற்போது தொகுதி எண்ணிக்கையை 14-லிருந்து 10-ஆக குறைத்து இருக்கிறாராம். அதுமட்டுமல்லாமல், போட்டியிடும் அனைத்து தொகுதியிலும் வெற்றி பெறவேண்டும் என புதிய திட்டத்தையும் வகுத்துள்ளாராம்.
News February 13, 2026
ரகசிய பேச்சுவார்த்தை நடத்திய திமுக

இதுவரை தொகுதிப் பங்கீட்டு குழுவை அமைக்காத திமுக தலைமை, அமைச்சர்கள் நேரு, வேலு வாயிலாக கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாம். இதில், முஸ்லிம் லீக், மமக, கொ.ம.தே.க., ஆகிய கட்சிகளுக்கு தலா இரு தொகுதி; வேல்முருகன், கருணாஸ் ஆகியோருக்கு தலா ஒரு தொகுதி என பேசி முடிக்கப்பட்டுவிட்டதாம். இதில், பண்ருட்டிக்கு பதிலாக நெய்வேலியை வேல்முருகன் கேட்டிருக்கிறாராம்.


