News January 31, 2026
BREAKING: அதிமுக கூட்டணியில் புதிய கட்சிகள்

அதிமுக கூட்டணியில் புதிய கட்சிகள் இணையவிருப்பதாக EPS அறிவித்துள்ளார். அதிமுக தலைமையிலான கூட்டணி வலுவாக இருப்பதாக கூறிய அவர், சில கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கிறது. விரைவில் அந்த கட்சிகள் அதிமுக கூட்டணியில் இணையும் என்றார். கனிமொழியுடன் கூட்டணி குறித்து பேசியதை பிரேமலதா மறுத்துள்ள நிலையில், தேமுதிக, புதிய தமிழகம் கூட்டணிக்கு வரவிருப்பதாக EPS சூசகமாக கூறியுள்ளதாக பார்க்கப்படுகிறது.
Similar News
News February 8, 2026
கரும்பு விவசாயி சின்னத்தால் நாதகவுக்கு பாதிப்பு வருமா?

நாதகவின் அடையாளமாக இருந்த கரும்பு விவசாயி சின்னம், தற்போது இந்திய குடியரசு கட்சிக்கு <<19075770>>ஒதுக்கப்பட்டதால்<<>>, வரும் தேர்தலில் குழப்பம் ஏற்படுமா என கேள்வி எழுந்தது. ஆனால், அக்கட்சி NDA-ல் அங்கம் வகிப்பதால் தமிழ்நாட்டில் தனித்துப் போட்டியிட வாய்ப்பு இல்லை; அக்கட்சிக்கு தமிழ்நாட்டில் செல்வாக்கு இல்லாததால், இங்கு தொகுதிகளை ஒதுக்கவும் வாய்ப்பு இல்லை; அதனால் எந்த பிரச்னையும் இல்லை என நாதகவினர் கூறுகின்றனர்.
News February 8, 2026
தொகுதியிலும் ‘V’-ஐ தேடும் விஜய்

கட்சி ஆரம்பித்ததில் இருந்தே ‘V’ செண்டிமெண்ட்டை விஜய் விடுவதாக தெரியவில்லை. கட்சி பெயர் முதல் மாநாடு நடத்தும் இடம் வரை ‘V’ வருவது போன்று பார்த்துக்கொள்கிறார். தேர்தலிலும் ‘V’ எழுத்தில் தொடங்கும் தொகுதியில் விஜய் களமிறங்குவதாக கூறப்படுகிறது. சென்னையில் விருகம்பாக்கம், வேளச்சேரி, விக்கிரவாண்டி, வேதாரண்யம் மற்றும் மத்திய மாவட்டங்களில் ‘V’ எழுத்தில் தொடங்கும் தொகுதியை சல்லடை போட்டு அலசுகிறார்களாம்.
News February 8, 2026
இன்றைய நல்ல நேரம்

▶பிப்ரவரி 8, தை 25 ▶கிழமை: ஞாயிறு ▶நல்ல நேரம்: 7:30 AM – 8:30 AM & 3:30 PM – 4:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 1:30 AM – 2:30 AM & 1:30 PM – 2:30 PM ▶ராகு காலம்: 4:30 PM – 6:00 PM ▶எமகண்டம்: 12:00 PM – 1:30 PM ▶குளிகை: 3:00 PM – 4:30 PM ▶திதி: சப்தமி ▶பிறை: தேய்பிறை ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம்.


