News January 30, 2026
செவ்வாய் கிரகத்தில் தண்ணீரா? நாசா புது தகவல்

செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருந்திருக்கலாம் என நாசா புதிய தகவலை வெளியிட்டுள்ளது. பில்லியன் ஆண்டுகள் பழமையான பவளப்பாறை வடிவத்தில் உள்ள பாறை ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதன்மூலம் செவ்வாயில் ஒருகாலத்தில் தண்ணீர் மற்றும் கனிமங்கள் இருந்திருக்கலாம் எனவும், இந்த பாறை பூமியில் உள்ள பாறை போன்று இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
Similar News
News February 9, 2026
கூட்டணியை மறைமுகமாக உறுதி செய்த கிருஷ்ணசாமி

தமிழ்நாட்டில் ஊழல் மலிந்து கிடப்பதற்கு முக்கிய காரணம் ஒரு கட்சி (DMK, ADMK) என்ற ஆட்சி முறைதான் என்று கிருஷ்ணசாமி குற்றம் சாட்டியுள்ளார். ‘கூட்டணி ஆட்சி’ என யார் சொல்கிறார்களே அவர்களுடன்தான் கூட்டணி பேசுவோம் என்று தெளிவுபடுத்திய அவர், நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் பொதுத் தொகுதியில் புதிய தமிழகம் போட்டியிடும் என்றார். அவரின் இந்த பேச்சு தவெகவுடன் கூட்டணி என்பதை மறைமுகமாக சொல்வதுபோல் அமைந்துள்ளது.
News February 9, 2026
அன்னை தெரசாவின் பொன்மொழிகள்

*அன்பை மட்டும் கடன் கொடுங்கள். அது மட்டுமே, அதிக வட்டியுடன் திரும்ப கிடைக்கும்
*கண்ணுக்குத் தெரிந்த மனிதனை மதிக்காவிட்டால்… கண்ணுக்குத் தெரியாத கடவுளை மதித்தும் பயன் இல்லை
*உன்மேல் அன்பு செலுத்துகிறவர்களை நேசி. உன்மீது கோபம் கொண்டவர்களை அதைவிட அதிகமாக நேசி
*வெறுப்பது யாராக இருந்தாலும். நேசிப்பது நீங்களாக இருங்க.. *இறக்கத்தான் பிறந்தோம் அதுவரை இரக்கத்தோடு இருப்போம்
News February 9, 2026
சங்கிகள் கதறல் தொடர வேண்டும்: உதயநிதி

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக மாணவரணி வெள்ளிவிழா மாநாட்டில் பேசிய உதயநிதி, நம் ஒற்றுமைதான் சங்கிக்கூட்டத்தை கதற விடுகிறது; நம் ஒற்றுமை மேலும் மேலும் உயர வேண்டும், அவர்களின் கதறல் தொடர வேண்டும் என்று தெரிவித்தார். மேலும், பாஜகவுடன் கூட்டணி வைக்க மாட்டோம் என சொல்லிவிட்டு, தற்போது கூட்டணி வைத்ததோடு மட்டுமல்லாமல் சங்கிகள் மதுரையில் கலவரம் செய்ய முயற்சித்தபோது EPS ஆதரவளித்ததாகவும் சாடினார்.


