News January 30, 2026

புதுச்சேரி: வாட்ஸ்அப் வழியாக புக்கிங்!

image

புதுச்சேரி மக்களே இனி கேஸ் சிலிண்டர் புக் செய்ய சிரமப்பட வேண்டாம். அதனை வாட்ஸ்அப் மூலமே எளிதாக புக் செய்யலாம். அதற்கு இண்டேன் (Indane): 7588888824, பாரத் (Bharat Gas): 1800224344, ஹெச்பி (HP Gas): 9222201122. மேற்கண்ட உங்கள் கேஸ் நிறுவனத்தின் எண்ணை போனில் SAVE செய்துவிட்டு, வாட்ஸ்அப்பில் ‘HI’ என மெசேஜ் செய்தால் போதும், உங்கள் வீடு தேடி கேஸ் சிலிண்டர் வந்தடையும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க!

Similar News

News February 9, 2026

44 பதக்கங்களை குவித்த புதுச்சேரி வீரர்கள்

image

புனேவில் எட்டாவது தேசிய அளவிலான மாஸ்டர் இறகு பந்து போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் புதுச்சேரியை சேர்ந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பல்வேறு பிரிவுகளில் கலந்து கொண்டனர். இவர்கள் 12 தங்கம், 11 வெள்ளி, 21 வெண்கல மொத்தம் 44 பதக்கங்களை பெற்று புதுச்சேரிக்கு பெருமை சேர்த்துள்ளனர். அதனை தொடர்ந்து, நேற்று லாஸ்பேட்டை உள் விளையாட்டு அரங்கில் அவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

News February 9, 2026

புதுவை: ரூ.5 லட்சம் காப்பீடு வேண்டுமா?

image

மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம். இதற்கு<> pmjay.gov.in<<>> இணையத்தில் ரேஷன், ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பித்த 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் காப்பீடு அட்டை வழங்கப்படும். இந்த திட்டத்திற்கு உங்கள் அருகில் உள்ள இ-சேவை மையங்களிலும் விண்ணப்பிக்கலாம். இதை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News February 9, 2026

புதுச்சேரி: 41 இடங்களில் தற்காலிக சோதனைச் சாவடிகள்

image

தேர்தல் நேரம் நெருங்குவதால், புதுச்சேரி மாநிலம் முழுவதும் மொத்தம் 41 இடங்களில் தற்காலிக சோதனை சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. புதுச்சேரி நகரில் மட்டும் 15 இடங்களில் இந்தச் சாவடிகள் உடனடியாக அமைக்கப்பட உள்ளன. காரைக்காலில் 10, ஏனாமில் 10 மற்றும் மாஹேவில் 6 என மாநிலம் முழுவதும் தேர்தல் துறை இதற்கான டெண்டர் கோரியுள்ளது. இந்த பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

error: Content is protected !!