News May 8, 2024
ஆண்டிமடம்: மின்சாரம் தாக்கி விவசாயி பலி

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தை அடுத்த பெரியகிருஷ்ணாபுரம் மேலத் தெருவை சேர்ந்தவர் கண்ணப்பன் மகன் கருணாநிதி (55) விவசாயியான இவர் தனது வீட்டின் பின்புறம் உள்ள மோட்டாரை போடுவதற்காக மோட்டாரை அவர் தொட்டபோது, மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து ஆண்டிமடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News February 16, 2026
அரியலூர்: 552 கோரிக்கை மனுக்களை அளித்த மக்கள்

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமைதோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும். அதன்படி இன்று நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் முதியோர் உதவி தொகை, இலவச வீட்டுமனை பட்டா, மாற்றுதிறனாளி உதவிதொகை, தொழில்கடன், பசுமை வீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 552 மனுக்கள் பெறப்பட்டது. இதில் அரசு துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
News February 16, 2026
அரியலூர்: இழந்த பணத்தை திரும்ப பெற வேண்டுமா?

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!
News February 16, 2026
அரியலூர்: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

அரியலூர் மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? இங்கு க்ளிக் செய்து உங்கள் மாவட்டம், சர்வீஸ் எண், ரசீது எண் மற்றும் உங்க மொபைல் எண்ணை பதிவிட்டு REGISTER பண்ணுங்க. அதன் பின் மாதந்தோறும் கரண்ட் பில் எவ்வளவு என்ற தகவல் உங்க போனுக்கே வந்துடும். மேலும் தகவலுக்கு 94987 94987 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இந்த அருமையான தகவலை உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ண மறந்துடாதீங்க!


