News January 30, 2026

குமரி: கஞ்சா பதுக்கிய வாலிபர் கைது

image

கன்னியாகுமரி மாவட்டம், இரணியல் காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் போலீசார் நேற்று ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது பள்ளம்பாலம் பகுதியில் சோதனையில் ஈடுபட்டபோது கண்டன்விளை பகுதியை சேர்ந்த ரெஜிஸ் என்ற வாலிபர் 1.20 கிலோ கஞ்சா வைத்திருப்பது தெரிந்தது. உடனே அவரிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் ரெஜிஸ் மீது வழக்குப்பதிவு செய்து இரணியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவரை சிறையில் அடைத்தனர்.

Similar News

News February 1, 2026

குமரி: தமிழ் தெரிந்தால் போதும் – வங்கி வேலை!

image

SBI வங்கியில் காலியாக உள்ள வட்டார அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.

1. வகை: வங்கி வேலை

2. பணியிடங்கள்: 2,050 (தமிழகத்தில் மட்டும்: 165)

3. வயது: 21-30 (SC/ST-35, OBC-33)

4. சம்பளம்: ரூ.48,480 – ரூ.85,920

5. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி

6. கடைசி தேதி: 18.02.2026

7.விண்ணப்பிக்க:<> CLICK HERE<<>>

இந்த தகவலை SHARE பண்ணுங்க!

News February 1, 2026

குமரி: இலவச சமையல் சிலிண்டர் பெறுவது எப்படி?

image

1.இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு பெற ‘இங்கே <>கிளிக்<<>>’ செய்து தங்களுக்கு விருப்பமான கேஸ் நிறுவனத்தைத் (Indane/Bharat/HP) தேர்வு செய்யவும்
2.பெயர்,மொபைல் எண் விவரங்களை உள்ளிட்டு ‘Register ‘ செய்ய வேண்டும்
3.ஆன்லைன் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்த விண்ணபத்தை அருகில் உள்ள எரிவாயு விநியோகஸ்தரிடம் ஒப்படைக்க வேண்டும்
4. விவரங்களுக்கு 1800-233-3555, 1800-266-6696 அழைக்கவும்.ஷேர் பண்ணுங்க

News February 1, 2026

குமரி: ஏணி சரிந்து விழுந்து ஒருவர் பலி

image

மருங்கூர் அமராவதி சேர்ந்தவர் சுந்தர் (51). கொத்தனாரான இவர் நேற்று சித்திரங்கோடு அருகே சாண்டம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கட்டட வேலையில் ஈடுபட்டிருந்தார். அங்கு ஏணியில் நின்று வேலை பார்க்கும் போது திடீரென ஏணி சரிந்து விழுந்ததில் பலத்த காயமடைந்தார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து திருவட்டார் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை.

error: Content is protected !!