News January 30, 2026
குமரி: வாகன ஓட்டிகளுக்கு SP எச்சரிக்கை

குமரியில் சாலை விபத்துகளை தடுக்கும் வகையில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை மட்டுமே கனரக வாகனங்கள் மாவட்டத்திற்குள் வருவதற்கு SP உத்தரவிட்டுள்ளார். இந்த நேர கட்டுப்பாட்டை மீறி வந்த 4 கனரக வாகனங்கள் மீது நாகர்கோவில் போக்குவரத்து பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து நேற்று அபராதம் விதித்தனர். இந்நிலையில் நேர கட்டுப்பாட்டை மீறி கனரக வாகனங்கள் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என SP எச்சரிக்கை.
Similar News
News February 2, 2026
குமரியில் ரவுடிகள் மீது முன்னெச்சரிக்கை நடவடிக்கை

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. இதைத்தொடர்ந்து குமரி மாவட்ட ரவுடிகள் மீது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட காவல்துறை தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது. இதற்காக ரவுடிகளின் பட்டியல் தயார் செய்யப்பட்டு அவர்களின் தற்போதைய செயல்பாடுகளை போலீசார் கண்காணித்து வருகின்றனர். அவர்கள் எங்கு இருக்கிறார்கள்? என்ன செய்கிறார்கள்? என்ற விபரங்களை சேகரித்து வருகின்றனர்.
News February 2, 2026
குமரி: NO EXAM.. ரூ.29,380 சம்பளத்தில் போஸ்ட் ஆபிஸ் வேலை

குமரி மக்களே, தமிழ்நாட்டில் உள்ள அஞ்சல் துறையில் காலியாக உள்ள 2019 GDS பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன. இதற்கு 18 – 40 வயதுகுட்பட்ட 10வது முடித்தவர்கள் பிப் 16க்குள் இங்கு <
News February 2, 2026
குமரி: சாலையோரம் அடையாளம் தெரியாத நபர் உயிரிழப்பு

குமரி, கடையாலுமூடு பகுதியில் பேருந்து நிறுத்தத்தில் இன்று காலை அடையாளம் தெரியாத நபர் மயங்கி கிடந்துள்ளார். இதை பார்த்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சோதனை செய்தபோது அந்த நபர் உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார் உயிரிழந்த கடந்த நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


