News January 30, 2026
விழுப்புரம் அருகே பேருந்து விபத்து!

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து விழுப்புரம் நோக்கி 30க்கும் மேற்பட்ட பயணிகளுடன் பேருந்து புறப்பட்டுச் சென்றது. மேம்பாலத்தில் சென்றபோது பிரேக் செயல்படாமல் பேருந்து வேகமாக முன்னேறியது. உடனடியாக சாமர்த்தியமாக செயல்பட்ட ஓட்டுநர், பேருந்தை சாலையோர தடுப்பில் மோதி நிற்கச் செய்தார். இதனால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. பேருந்தில் உள்ள அனைத்து பயணிகளும் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
Similar News
News February 13, 2026
விழுப்புரத்தில் 242 மாற்றுத்திறனாளிகள் கைது!

மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகையை ரூ.6 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த பிப்.10ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் அனைத்து மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் போராட்டம் நடத்தினர். இதில், விழுப்புரத்தில் நேற்று(பிப்.12) மூன்றாவது நாளாக போராடிய மாற்றுத்திறனாளிகளை போலீசார் கைது செய்தனர்.
News February 13, 2026
திண்டிவனம்: அரசு அதிகாரி அதிரடி கைது!

திண்டிவனம் அருகே நாரேரிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன்(29). விவசாயியான இவர், தனது புதிய வீட்டிற்கு மின் இணைப்பு பெற வணிக ஆய்வாளர் ரேகாவை(40) அணுகினார். அவர், அதற்கு ரூ.4 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத் துறையிடம் புகார் அளித்ததை அடுத்து, ரசாயன பொடி தடவிய ரூபாய் நோட்டுகளை வைத்து அதிகாரியை போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர். அவரை பணியிடை நீக்கம் செய்துள்ளனர்.
News February 13, 2026
விழுப்புரம் இரவு ரோந்து பணி விவரம்

விழுப்புரம் மாவட்ட காவல் துறையின் சார்பில் இன்று இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை சிறப்பு ரோந்து பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. மாவட்டத்தின் அனைத்து
காவல் நிலைய எல்லைகளிலும் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவர். பொதுமக்கள் பாதுகாப்பு கருதி
சந்தேக நபர்கள் கண்காணிக்கப்படுவதுடன், அவசர தேவைகளுக்கு உதவ எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.


