News January 30, 2026

EPS-ஐ போல கனிமொழி முகத்தை மூடவில்லை: SP

image

கனிமொழியின் டெல்லி பயணம் குறித்து <<18998266>>EPS<<>> வைத்த விமர்சனத்துக்கு செல்வபெருந்தகை பதிலடி கொடுத்துள்ளார். EPS போல முகத்தை மூடிக்கொண்டு, மாற்று காரில் சென்று கனிமொழி ராகுல் காந்தியை சந்திக்கவில்லை என அவர் சாடியுள்ளார். மேலும், ஆட்சி அதிகாரத்தில் காங்கிரஸ் பங்கு கேட்குமா என்ற கேள்விக்கு, அதுகுறித்து காங்கிரஸின் தலைமையும், திமுகவின் தலைமையையும் இணைந்து முடிவு செய்யும் எனவும் விளக்கம் அளித்துள்ளார்.

Similar News

News February 6, 2026

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால்
▶இயல்: அரசியல்
▶அதிகாரம்: மடியின்மை
▶குறள் எண்: 603
▶குறள்:
மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்த
குடிமடியும் தன்னினும் முந்து.
▶பொருள்: அறிவும் அக்கறையுமில்லாத சோம்பேறி பிறந்த குடி, அவனுக்கு முன் அழிந்து போய் விடும்.

News February 6, 2026

திமுக ஆட்சியில் மாணவர்கள் ரவுடிகளாக மாற்றம்: நயினார்

image

மதுரையில் மாணவர்கள் பெட்ரோல் குண்டு வீசியதுடன், பயங்கர ஆயுதங்களை வைத்திருந்தது நெஞ்சை உலுக்குவதாக நயினார் கூறியுள்ளார். தனது X பதிவில், CM ஸ்டாலினின் ஆட்சியில் மாணவர்கள் ரவுகளாக உருமாறுவதாகவும், இது சமூகத்திற்கே பேராபத்தானது எனவும் நயினார் விமர்சித்துள்ளார். நடவடிக்கை எடுக்க வேண்டிய அமைச்சர் அன்பில் மகேஷ் கையைக் கட்டிக் கொண்டு வேடிக்கை பார்ப்பது வெட்கக்கேடானது எனவும் அவர் கூறியுள்ளார்.

News February 6, 2026

வாயில் நெருப்பு புகைந்தால், வீட்டில் அடுப்பு புகையாது: TR

image

புகைப்பிடிப்பதால் ஏற்படும் தீங்கு குறித்து தனக்கே உரிய ஸ்டைலில் டி.ராஜேந்தர் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார். உயிருள்ள வரை உஷா ரீ-ரிலீஸ் நிகழ்ச்சியில் பேசிய அவர் நான் டிரம்ஸ் அடிப்பேன் ஆனால் தம்மடிக்க மாட்டேன்; என் வாயில் நெருப்பு புகைந்தால், என் வீட்டில் அடுப்பு புகையாது எனத் தெரிவித்தார். மேலும், தம் அடிக்காத காரணத்தினால் தான் இன்றும் தம் பிடித்து பேசுவதாக அவர் குறிப்பிட்டார்.

error: Content is protected !!