News May 8, 2024
தென்னிந்தியர்கள் குறித்து காங். தலைவர் சர்ச்சை பேச்சு

காங். மூத்த தலைவர் சாம் பிட்ரோடா தென்னிந்தியர்களை ஆப்பிரிக்கர்களுடன் ஒப்பிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பேட்டியின் போது, பன்முகத்தன்மை கொண்ட நாட்டிற்கு இந்தியா சிறந்த உதாரணம் என்றார். இந்திய மக்கள் கிழக்கில் சீனர்களை போலவும், மேற்கில் அரேபியர்கள் போலவும், வடக்கில் வெள்ளையர்களைப் போலவும் இருப்பதாக குறிப்பிட்ட அவர், தென்னிந்தியர்களை ஆப்பிரிக்கர்கள் போல இருப்பதாகத் தெரிவித்தார்.
Similar News
News August 19, 2025
இந்த கேள்விக்கு பதில் தெரியுமா?

நியூஸ் படிக்குறத நிறுத்திட்டு, கொஞ்சம் மூளைக்கு வேலை கொடுப்போம் வாங்க. மேலே உள்ள படத்தில் ??? உள்ள இடத்தில், என்ன நம்பர் வரும் என கமெண்ட் பண்ணுங்க. சட்டென பார்க்கும் போது, கொஞ்சம் கஷ்டமாக தான் தெரியும். ஆனால், இது ரொம்ப ஈசி. நல்லா கவனிச்சி பாருங்க. எத்தனை பேர் சரியாக பதில் சொல்றீங்க என பார்ப்போம்.
News August 19, 2025
படம் எடுக்கலாம்… ஸ்கூல் பசங்களுக்கு ஹேப்பி நியூஸ்

அரசுப் பள்ளிகளில் 6 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு சிறார் திரைப்பட மன்றம் சார்ந்த போட்டிகள் நாளை(ஆக.20) தொடங்கவுள்ளது. இதில், ‘ஒரு நாள் பள்ளி தலைமை ஆசிரியராக நான்’ என்ற 3 நிமிட படத்துக்கு கதையுடன் வசனம் எழுதுதல், மரங்களின் முக்கியத்துவம் என்ற தலைப்பில் 1 நிமிட படத்தை உருவாக்குதல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற உள்ளன. மார்க் அடிப்படையில் வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்படுவர். நீங்க ரெடியா..!
News August 19, 2025
அதிக மிஸ் யுனிவர்ஸ் பட்டங்களை வென்ற நாடுகள்

1952-ல் இருந்து மிஸ் யுனிவர்ஸ் போட்டி நடந்துவருகிறது. இதில் அதிக மிஸ் யுனிவர்ஸ் பட்டங்களை பெற்றுள்ள டாப் 10 நாடுகளில் இந்தியா 5வது இடத்தில் உள்ளது.▶USA-9 ▶வெனிசுலா-7 ▶போர்ட்டோ ரிக்கோ (தீவு)-5 ▶பிலிப்பைன்ஸ்-4 ▶இந்தியா-3 ▶மெக்சிகோ-3 ▶தென்னாப்பிரிக்கா-3 ▶ஸ்வீடன்-3 ▶பிரேசில்-2 ▶ஜப்பான்-2 பட்டங்கள் வென்றுள்ளன. இந்தியாவில் மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்றவர்கள் யார் தெரியுமா? கமண்ட்ஸ்ல சொல்லுங்க..