News January 29, 2026

பாம்பனில் தலைகுப்புற கவிழ்ந்த கிரேன்

image

இராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் கடலில் அமைந்துள்ள பழைய இரும்பு தூக்கு பாலத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த ராட்சத கிரேன் பாரம் தாங்காமல் தலைகுப்புற கவிழ்த்து. நூற்றாண்டு பழைமையான பாம்பன் இரும்பு தூக்கு பலத்தை அகற்ற பயன்படுத்தப்பட்டு வந்த கிரேன் முதல் நாளிலே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. ரயில்வே ஊழியர்கள் மற்றும் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியே ஏற்படுத்தியுள்ளது.

Similar News

News February 20, 2026

ராமநாதபுரம்: உங்கள் பட்டா யார் பெயரில் இருக்கு தெரியுமா?

image

ராமநாதபுரம் மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் பட்டா யார் பெயரில் இருக்கிறது என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். இதற்கு <>Tamil Nilam<<>> என்ற செயலியில் Location-ஐ On செய்து, நீங்கள் இருக்கும் இடம், நிலம் போன்றவை தேர்ந்தெடுத்து ‘பட்டா’ என்பதை கிளிக் செய்தால், அந்த இடம் யார் பெயரில் உள்ளது என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம். மேலும் FMB மற்றும் EC போன்றவற்றையும் பார்க்க முடியும். (SHARE IT)

News February 20, 2026

ராமநாதபுரத்தில் மீன் பிரியர்கள் அதிர்ச்சி

image

ராமநாதபுரத்தில் மீன் மார்க்கெட்டுகளில் கெட்டுப் போன மீன்கள் விற்பதாக எழுந்த புகாரின் பேரில் உணவு பாதுக்காப்பு துறையினர் ராமநாதபுரம் சாலைத் தெருவில் உள்ள மீன் மார்க்கெட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அதில், விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சுமார் 6 1/2 கிலோ கெட்டுப் போன மீன்களை பறிமுதல் செய்து பினாயில் ஊற்றி அழித்தனர். பின்னர் மீண்டும் இது தொடர்ந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.

News February 20, 2026

12 மீனவர்களுக்கு மார்ச் 4ம் தேதி வரை நீதிமன்ற காவல்

image

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன் பிடிக்க சென்று நேற்று (பிப் 19) அதிகாலை நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 2 விசைப்படகையும் அதிலிருந்த 12 மீனவர்களையும் கைது செய்து ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்து நீதிபதி 12 பேரையும் வரும் மார்ச் 4ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.

error: Content is protected !!