News January 29, 2026
394 பணியிடங்கள்.. உடனே அப்ளை பண்ணுங்க

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் 394 அப்ரெண்டிஸ் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. டெக்னீஷியன், டேட்டா எண்ட்ரி ஆப்ரேட்டர் உள்ளிட்ட பணிகளுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது. டிகிரி, டிப்ளமோ, 12-ம் வகுப்பு முடித்தவர்கள் இந்த தொழிற்பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் https://iocl.com/apprenticships தளத்தில் பிப்.10-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.
Similar News
News February 6, 2026
நாம் தமிழரின் கூட்டணியில் ராமதாஸ் பாமக?

<<18978274>>திருமாவின்<<>> உறுதியான நிலைப்பாட்டால் ராமதாஸ் தரப்பு பாமகவுடன் கூட்டணிப் பேச்சை திமுக நிறுத்திவிட்டது. இந்நிலையில், நாதகவுடன் கூட்டணி அமைக்கலாம் என சீமானை தைலாபுரத்து விசுவாசிகள் நாடியதாகவும், அதற்கு அவர் NO சொல்லியதாகவும் கூறப்படுகிறது. இதனால், EPS மூலமாக அன்புமணியை கன்வின்ஸ் செய்யலாம் என நினைக்கிறார்களாம். ஆனால், அன்புமணியிடம் சரண்டர் ஆகமாட்டேன்; தனித்து போட்டியிடலாம் என ராமதாஸ் கூறுகிறாராம்.
News February 6, 2026
₹1,500 உரிமைத் தொகை கட்.. அமைச்சர் எச்சரிக்கை

மத்திய பிரதேசத்தில் Ladli Behna Yojana திட்டத்தின் கீழ் மகளிருக்கு மாதம் ₹1,500 தரப்படுகிறது. இந்நிலையில், வருவாய் துறை அமைச்சர் கரன் சிங் வர்மா பங்கேற்ற விழாவிற்கு, சொற்ப அளவில் பெண்கள் வந்திருந்தனர். இதனால் கோபமடைந்த அவர், அடுத்தமுறை அரசின் நிகழ்ச்சிகளுக்கு பெண்கள் வரத் தவறினால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து Ladli Behna Yojana திட்டத்தில் இருந்து பெயர்களை நீக்க உத்தரவிடுவேன் என எச்சரித்தார்.
News February 6, 2026
அரசியலுக்கு குட்பை சொல்கிறாரா திமுக அமைச்சர்?

உடல்நலக்குறைவால் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அரசியலில் இருந்து விலகப்போவதாக ஊடகங்களில் கிசுகிசுக்கப்படுகிறது. சொத்துக்குவிப்பு வழக்கு, ED நெருக்கடி என தவிக்கும் அவர், தனது வாரிசுகளை அரசியலுக்கு கொண்டுவர எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லையாம். எனவே தனது விசுவாசி ஒருவரை தலைமைக்கு அடையாளம் காட்டிவிட்டு அரசியலுக்கு குட்பை சொல்ல உள்ளாராம். ஆனால், இவை அனைத்தும் பொய் என அமைச்சரின் தரப்பு மறுக்கிறது.


