News January 29, 2026
அதிமுகவில் 2000 பேர் இணைந்தனர்

சேலத்தில் நடந்த நிகழ்ச்சியில் EPS முன்னிலையில் 2000 பேர் அதிமுகவில் இணைந்தனர். நிகழ்ச்சியில் பேசிய EPS, கல்விக்கடன் ரத்து உள்ளிட்ட பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை என்று குற்றம்சாட்டினார். மேலும், அதிமுக ஆட்சி அமைந்தவுடன் 5 லட்சம் பெண்களுக்கு ஸ்கூட்டர் வாங்க ₹25,000 மானியம் வழங்கப்படும் என்றும் 100 நாள் வேலைத்திட்டத்தை 150 நாளாக உயர்த்துவோம் எனவும் தெரிவித்தார்.
Similar News
News February 3, 2026
காரிய வெற்றியைத் தரும் வேல் வழிபாடு

முருகன் வேலை வழிபட்டால், முருகன் அருளோடு பராசக்தியின் அருளும் கிடைக்குமாம். முருகன் படத்தை துடைத்து, சந்தனம், குங்குமம் வைக்கவும். 1 அல்லது 6 என்ற எண்ணிக்கையில் நெய் தீபம் ஏற்றி வைத்து, நெய்வேத்தியம் படைக்கவும். ‘முருகா’ என்று 108 முறை கூறி முடித்த பிறகு, வேலின் அடியில் 1 சந்தன குங்கும பொட்டு வைக்கவும். தினமும் வேலுக்கு கீழிருந்து மேலாக ‘முருகா’ என 108 முறை கூறி, சந்தன பொட்டு வைத்து வரவும்.
News February 3, 2026
நாட்டு நிலவரம் தெரியாமல் பிதற்றும் விஜய்: சிவசங்கர்

விசில் சின்னத்திற்கு CM ஸ்டாலின் வாக்களிப்பார் என விஜய் கூறியதற்கு அமைச்சர் சிவசங்கர் பதிலடி கொடுத்துள்ளார். மக்களை நேரடியாக சந்திக்கும் திமுக தலைவர்களுக்குத்தான் உண்மையான நிலவரம் தெரியும் என்ற அவர், தன் இருப்பிடத்திற்கு எல்லோரையும் வரவழைத்து பேசும் விஜய்க்கு நாட்டு நிலவரம் தெரியாது எனவும் சாடினார். மேலும், விஜய் பிதற்றுகிறார் என்றும் அவர் காட்டமாக விமர்சித்தார்.
News February 3, 2026
தங்கம் விலை மேலும் குறைந்தது

சர்வதேச சந்தையில் தங்கம் விலை கடந்த வாரம் வரலாறு காணாத புதிய உச்சமாக 1 அவுன்ஸ்(28g) $5,500-ஐ கடந்திருந்தது. தற்போதைய நிலவரப்படி 1 அவுன்ஸ் $47 (இந்திய மதிப்பில் ₹4,238) குறைந்து $4,800-க்கு விற்பனையாகிறது. இதே நிலை நீடித்தால் இன்றைய தினம் இந்திய சந்தையிலும் தங்கம் விலை குறைய வாய்ப்புள்ளது.


