News January 29, 2026

கிருஷ்ணகிரி: இனி ரேஷன் கடை வேண்டாம்; 1 SMS போதும்!

image

கிருஷ்ணகிரி மக்களே; ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். உடனே SHARE பண்ணுங்க.

Similar News

News February 17, 2026

அங்கன்வாடி ஊழியர்கள் நூதன போராட்டம்!

image

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் கடந்த 13 நாட்களாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். 14வது நாளாக நேற்று (பிப்.16) தேர்தல் வாக்குறுதி எண்: 313-ஐ நிறைவேற்ற கோரி 313 வடிவில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு மாநில துணைத் தலைவர் நோஹிரா தலைமை தாங்கினார்.

News February 17, 2026

கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

image

கிருஷ்ணகிரி தாசில்தார் அலுவலகம் முன்பு தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கம் சார்பில் நேற்று (பிப்.16) மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் அறிவழகன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் ஈஞ்சார் கிராம நிர்வாக அலுவலகத்திற்குள் புகுந்து கிராம உதவியாளரை தாக்கியவர்களை கைது செய்ய வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

News February 17, 2026

கிருஷ்ணகிரி: VOTER ID தொலஞ்சிருச்சா..? CLICK NOW

image

கிருஷ்ணகிரி மக்களே, 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது. இந்த சமயத்தில், உங்க VOTER ID தொலைந்து போயிடுச்சா? இல்லை மோசமாகவும், பழசாகவும் இருக்கா? கவலை வேண்டாம்.<> இங்கே கிளிக் <<>>செய்து உங்க VOTER ID எண்ணை உள்ளீடு செய்யவும். பின் மொபைலுக்கு வரும் OTP-ஐ பதிவிட்டால் புதிய கார்டை உடனே டவுன்லோடு செய்யலாம். மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!