News January 29, 2026
‘அரசுக்கல்லூரியில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை’

அண்ணா பல்கலை., கொடூரம் போல, சென்னை நந்தனம் அரசுக் கலைக்கல்லூரியில் மற்றொரு மிருகத்தனமான சம்பவம் நடந்துள்ளது. கல்லூரி கேண்டீனில் பணிபுரியும் பெண்ணுக்கு, சமையல் மாஸ்டரான குணசேகர் மற்றும் சிலர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். தனக்கு நேர்ந்த கொடூரத்தை அழுதுகொண்டே காவலாளியிடம் அப்பெண் கூறியிருக்கிறார். இதுகுறித்த புகாரின் பேரில், குணசேகரை போலீசார் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்துள்ளனர்.
Similar News
News February 5, 2026
மகளிர் உரிமைத் தொகை ₹2,500: ரங்கசாமி தொடங்கி வைத்தார்

புதுச்சேரியில் மகளிர் உரிமைத் தொகையை ₹2,500-ஆக உயர்த்தி CM ரங்கசாமி அறிவித்திருந்தார். உயர்த்தப்பட்ட நிதியுதவி திட்டத்தை இன்று அவர் தொடங்கி வைத்துள்ளார். அதன்படி, சிவப்பு குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ₹2,500 வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் உரிமைத் தொகை உயர்த்தப்படும் என CM ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். எவ்வளவு உயரும் என்ற அறிவிப்பு தேர்தல் வாக்குறுதியாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News February 5, 2026
ஆளே மாறிப்போன குஷ்பு!

பாஜக மாநில துணைத் தலைவராக உள்ள குஷ்பு சுந்தர், சமீப காலமாக உடல் எடை குறைப்பில் கவனம் செலுத்தி வந்தார். தற்போது அவர் ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு எடையை குறைத்துள்ளார். இன்ஸ்டாவில் அவர் பதிவிட்டுள்ள லேட்டஸ்ட் போட்டோஸ், அவரது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. குஷ்புவா இது என நெட்டிசன்கள் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர். மேலே உள்ள போட்டோஸை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க.
News February 5, 2026
விஜய் கூட்டத்திற்கு அனுமதி மறுப்பு

தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தவெகவிற்கு பின்னடைவை ஏற்படுத்தும்படியான செய்தி வெளியாகியுள்ளது. சேலத்தில் நடைபெறவிருந்த தவெக பிரசார கூட்டத்திற்கு போலீஸ் அனுமதி மறுத்துள்ளது. பிப்.13-ம் தேதி<<19044768>> சேலம் தாளமுத்து நடராசன்<<>> மைதானத்தில் விஜய் பங்கேற்கும் பிரசார கூட்டத்திற்கு தவெக தரப்பில் மனு அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், தேர்தல் வழிகாட்டு நெறிமுறைகள் சரியாக இல்லை எனக்கூறி போலீஸ் இந்நடவடிக்கை எடுத்துள்ளது.


