News January 29, 2026
BREAKING: தங்கம் விலை வரலாறு காணாத உச்சம்

ஒவ்வொரு நாளும் தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. இந்நிலையில், இன்று (ஜன.29) 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹1,190 உயர்ந்து ₹16,800-க்கும், சவரனுக்கு ₹9,520 அதிகரித்து ₹1,34,400-க்கும் விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் தொடர்ந்து தங்கம் விலை உயர்ந்து வருவதால் வரும் நாள்களிலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது நகைப்பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Similar News
News February 18, 2026
சூரிய ஒளியில் வைட்டமின் டி பெற இதுதான் சரியான நேரம்!

‘வைட்டமின் டி’ என்றாலே முதலில் நம்முடைய நினைவுக்கு வருவது சூரிய ஒளி தான். அதை நாம் பெற காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரைதான் சிறந்த நேரம் என டாக்டர்கள் கூறுகின்றனர். ஏனெனில் இந்த நேரத்தில் தான் சூரியனின் புற ஊதா கதிர்கள் வலுவாக இருப்பதால், தோல் ‘வைட்டமின் டி’ யை திறம்பட உற்பத்தி செய்ய உதவுமாம். உங்களின் தோலின் தன்மையை பொறுத்து வெயிலில் 15-20 நிமிடங்கள் வரை நிற்கலாம்.
News February 18, 2026
எல்லா கட்சிகளுடனும் கூட்டணி பேச்சுவார்த்தை: GK மணி

தேர்தல் நெருங்கும் நிலையில் கிட்டதட்ட அனைத்து கட்சிகளும் கூட்டணி குறித்த அறிவிப்பை வெளியிட்டுவிட்டன. ஆனால், ராமதாஸ் தரப்பு கூட்டணி விவகாரத்தில் இன்னும் குழப்பத்தில் உள்ளது. இந்நிலையில் ஆளும்கட்சி, எதிர்க்கட்சி என எல்லோரிடமும் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவதாக GK மணி வெளிப்படையாக தெரிவித்துள்ளார். மேலும், இறுதி முடிவை விரைவில் ராமதாஸ் அறிவிப்பார் எனவும் கூறியுள்ளார்.
News February 18, 2026
இன்றைய நல்ல நேரம்

▶பிப்ரவரி 18, மாசி 6 ▶கிழமை: புதன் ▶நல்ல நேரம்: 9:30 AM – 10:30 AM & 4:30 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்:10:30 AM – 11:30 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 12:00 PM – 1:30 PM ▶எமகண்டம்: 7:30 AM – 9:00 AM ▶குளிகை: 10:30 AM – 12:00 PM ▶திதி: பிரதமை ▶பிறை: வளர்பிறை ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால்.


