News January 29, 2026

சென்னையில் 2 நாள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்!

image

சென்னை மெட்ரோ பணிகளுக்காக தேனாம்பேட்டை மண்டலம், நுங்கம்பாக்கம் உத்தமர் காந்தி சாலையில் பிரதான குடிநீர் குழாய் இணைப்பு பணிகள் நடைபெறுகிறது. இதன் காரணமாக மண்டலம் 9, 10, 13 ஆகிய பகுதிகளில் ஜனவரி 30 மற்றும் 31 ஆகிய இரு நாட்கள் தற்காலிகமாக குடிநீர் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது. சென்னை குடிநீர் வாரியம், பொதுமக்களை முன்னெச்சரிக்கையாக தேவையான தண்ணீரை சேமித்து வைத்துக்கொள்ள அறிவுறுத்தியுள்ளது.

Similar News

News February 10, 2026

ஜி.கே.மணி பெரிய துரோகி – அன்புமணி

image

சென்னை, ராயப்பேட்டையில் பாமக தலைவர் அன்புமணி தலைமையில் பாமக இளைஞரணி பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், அன்புமணி பேசுகையில், “கட்சியும், சின்னமும் நம்மிடம் தான் இருக்கிறது. ஆனால், நிறுவனர் ராமதாஸை சுற்றி துரோகிகளே உள்ளனர். தற்போது நமக்கு கட்சி கிடைத்துவிட்டது என்பது தெரிந்தும், அவரை ஏமாற்றுகின்றனர். குறிப்பாக, ஜிகே. மணி மிகப்பெரிய துரோகி” என தெரிவித்தார்.

News February 10, 2026

சென்னையில் 8 கிராம் தங்கம் இலவசம்!

image

TN அரசு சாதி மறுப்பு திருமணங்களை ஊக்குவிக்க டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி கலப்பு திருமண திட்டத்தை செயல்படுத்துகிறது. இதன்படி, மணமக்கள் 10th முடித்திருந்தால் ரூ.25,000, 8 கி தங்கம், டிகிரி பெற்றிருந்தால் ரூ.50,000, 8 கி தங்கம் வழங்கப்படுகிறது. இதற்கு, BC,MBC/SC,ST & FC/BC,MBC முறையில் திருமணம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு சமூக நல அலுவலரை அணுகலாம். இந்த தகவலை உடனே ஷேர் பண்ணுங்க.

News February 10, 2026

சென்னை மெட்ரோ உதவி எண்கள் மீண்டும் செயல்பாடு

image

சென்னை மெட்ரோ ரயிலில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நேற்று CMRL உதவி எண்கள் செயல்படவில்லை. மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, இன்று கோளாறு சரிசெய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது CMRL உதவி எண் 1860 425 1515 மற்றும் பெண்கள் உதவி எண் 155370 வழியாக புகார்கள் தெரிவிக்கலாம். மேலும், ஏற்பட்ட சிரமத்திற்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டுள்ளது.

error: Content is protected !!