News May 8, 2024

வேலூர் மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

image

வேலூர் மாவட்டத்தில் இன்று (மே.08) மதியம் 1 மணி வரை இடியுடன்கூடிய, லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிகத்து வரும் நிலையில், கடந்த சில நாட்களாகவே ஆங்காங்கு மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Similar News

News January 14, 2026

வேலூரில்: உண்டியல் திருடனை சுற்றி வளைத்த மக்கள்!

image

குடியாத்தம் பலமநேர் ரோட்டில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் 2 வாலிபர்கள் நேற்று நூலில் காந்தத்தை கட்டி உண்டியலுக்குள் விட்டு பணத்தை திருட முயன்றனர். பொதுமக்கள் அவர்களை சுற்றி வளைத்து பிடித்த போது ஒருவர் தப்பி ஓடிவிட்டார். பிடிபட்ட மற்றொரு நபரை குடியாத்தம் டவுன் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணையில் அவர் கமல் (26) என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

News January 14, 2026

வேலூர்: 100 அடி கிணற்றில் விழுந்த முதியவர் பரிதாப பலி!

image

வேலூர்: மசிகத்தை சேர்ந்தவர் ஜெகதீசன் (62). இவர் நேற்று திடீரென காணாமல் போனார். அவரை குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. பின்னர், அதே கிராமத்தில் ஒரு விவசாய நிலத்தில் 100 அடி ஆழமுள்ள தரைமட்ட கிணற்றில் ஜெகதீசன் தவறி விழுந்து இறந்து கிடந்தது தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் வந்து முதியவரின் உடலை மீட்டனர். இதுகுறித்த வழக்கை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News January 14, 2026

வேலூர்: காவல்துறை இரவு ரோந்து பணி விவரம் வெளியீடு

image

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் குடியாத்தம், காட்பாடி, கே வி குப்பம், மேல்பட்டி, பேரணாம்பட்டு, அணைக்கட்டு, பள்ளிகொண்டா இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணி செய்து வருகின்றன அதன்படி நேற்று (ஜன-13) இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.

error: Content is protected !!