News January 29, 2026

அரக்கோணத்தில் அதிரடி கைது!

image

ராணிப்பேட்டை: அரக்கோணம் அடுத்த வேடல் – மின்னல் சாலை போலீசார் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது வேடல் காந்தி நகர் பகுதியில் 2 வாலிபர்களிடம் மடக்கி விசாரித்ததில், அவர்களிடம் கஞ்சா இருந்தது தெரிய வந்தது. உடனே நேதாஜி(29), கோடீஸ்வரன்(22) ஆகியோரை கைது செய்து, அவர்களிடம் இருந்த 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Similar News

News February 2, 2026

ராணிப்பேட்டை: ஆடு, மாடு வளர்க்க ரூ.50 லட்சம் வரை மானியம்!

image

ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடை வளர்ப்பில் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு உத்யமி மித்ரா திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதன் மூலம், கால்நடை பண்ணைகள் அமைப்பதற்கு ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் <>இங்கு கிளிக் <<>>செய்து அதற்கான தகுதிகளை அறிந்துகொண்டு விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

News February 2, 2026

ராணிப்பேட்டை: கடைகளில் வாங்கிய பொருட்கள் சரியில்லையா?

image

சில சமயம் நாம் கடைகளில் வாங்கும் பொருட்கள் தரமற்றோ, பழைய பொருட்களாகவோ வரலாம். இதை கடை ஓனர் மாற்ற மறுத்தாலோ (அ) பணத்தைத் தராவிட்டாலோ நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் புகார் செய்யலாம். வாங்கிய பொருள் 15 நாட்களுக்குள் சேதாரம் இல்லாமல், வாங்கிய நிலையில் இருந்தால், அதை மாற்ற, பணத்தைத் திரும்பப் பெற உரிமை உண்டு. மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு அலுவலரை (044-28589055) தொடர்பு கொள்ளலாம். ஷேர்

News February 2, 2026

ராணிப்பேட்டை: திடீர்னு பெட்ரோல் காலியா? இதை பண்ணுங்க!

image

ராணிப்பேட்டை மக்களே, திடீரென உங்கள் வண்டியில் பெட்ரோல் காலியாகி நிற்பதை விட கொடுமை வேறெதுவும் இல்லை எனலாம். இந்த பிரச்னைக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் தீர்வு வழங்கியுள்ளது. அந்நிறுவனத்தின் ‘Fuel@Call’ என்ற ஆப்பின் மூலம், எங்கிருந்து வேண்டுமானாலும் பெட்ரோல்/டீசல் ஆர்டர் செய்யலாம். உடனே, நேரில் கொண்டுவந்து டெலிவரி பண்ணிடுவாங்க. இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!