News January 29, 2026
6 வயது சிறுமிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை!

டெல்லியில் 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உணவு தருவதாக ஆசைக்காட்டி சிறுமியின் மறைந்த சகோதரனின் 10, 13 மற்றும் 14 வயதுடைய மூன்று நண்பர்கள் இக்கொடூர செயலில் ஈடுபட்டுள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட 2 சிறுவர்கள் கைதான நிலையில், 3-வது சிறுவனும் அவரது குடும்பத்தினரும் தலைமறைவாகியுள்ளனர். அவர்களை கைது செய்யக்கோரி மக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
Similar News
News February 14, 2026
CM-க்கு தைரியம் இருந்தால் இத பண்ணட்டும்: நிர்மல் குமார்

பாஜகவோடு திமுக நல்ல உறவில் இருப்பதாக CTR நிர்மல் குமார் கூறியுள்ளார். மகளிர் உரிமைத் தொகையை யாரோ முடக்கப் பார்க்கிறார்கள் என CM ஸ்டாலின் பொத்தாம் பொதுவாக கூறுவதாக சொன்ன அவர், தைரியம் இருந்தால் யார் அதை முடக்க பார்த்தார்கள் என சொல்லட்டும் என் சவால் விட்டுள்ளார். மேலும், மக்களிடம் இருந்து பல ஆயிரம் கோடிகளை ஏமாற்றிவிட்டு, பல நூறுகளை கொடுத்து ஏமாற்றி வருகிறார்கள் எனவும் கூறியுள்ளார்.
News February 14, 2026
FLASH: திமுகவில் இணைந்த EX மத்திய அரசு அதிகாரி!

விருப்ப ஓய்வு பெற்ற மத்திய GST நுண்ணறிவு முதன்மை கூடுதல் தலைமை இயக்குநர் பாலமுருகன் IRS, ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். மதுரை காமராஜர் பல்கலை.யில் பயின்ற இவர், மக்களுக்கான சேவையை மேம்படுத்துதல் பிரிவில் முனைவர் பட்டம் பெற்றவர். 20 ஆண்டுகளுக்கும் மேலாக சுங்கவரி, GST உள்ளிட்ட துறைகளில் பணிபுரிந்த இவர், விருப்ப ஓய்வு பெற்ற நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக திமுகவில் ஐக்கியமாகியுள்ளார்.
News February 14, 2026
வருமானத்தைப் பெருக்க இத பண்ணுங்க..

பொறாமை, கண் திருஷ்டியில் இருந்து தப்பிக்க, இது காலங்காலமாக மக்கள் நம்பும் விஷயம்தான். கைப்பிடி உப்பு, 5 கருமிளகு எடுத்துக் கொள்ளவும். முதலில் உங்கள் தலையை 3 சுற்று வலதுபுறமாக சுற்றி, அடுத்து குடும்பத்தினருக்கும் சுற்றவும். அப்போது கடன்நீங்கி, வருமானம் பெருக வேண்டிக் கொள்ளுங்கள். பின், வீட்டுக்கும் திருஷ்டி சுற்றிவிட்டு உப்பையும், மிளகையும் கொட்டாங்குச்சியில் போட்டு எரித்து விடவும். SHARE.


