News May 8, 2024
3 ஆண்டு திமுக ஆட்சி சாதனையல்ல, சோதனை: EPS

ஆட்சிக்கு வந்து நேற்றுடன் 3 ஆண்டுகள் நிறைவடைந்ததை திமுகவினர் கொண்டாடி வரும் நிலையில், இபிஎஸ் அதனைக் கடுமையாக விமர்சித்துள்ளார். திமுக அரசின் 3 ஆண்டுகால ஆட்சி சாதனை அல்ல, வேதனை. ஆட்சிக்கு வந்து மக்களுக்கு நன்மை செய்யாத, வாக்குறுதிகளை நிறைவேற்றாத ஏமாற்று மாடல் அரசு என்று சாடிய அவர், 3 ஆண்டுகளில் ரூ.3.5 லட்சம் கோடி கடன் வாங்கி மக்களை கடனாளியாக்கியதுதான் இந்த அரசின் சாதனை என குற்றம்சாட்டினார்.
Similar News
News August 20, 2025
பட்டுக்கோட்டையில் போட்டி? TTV தினகரன் பதில்

2026 தேர்தலில் நிச்சயமாக போட்டியிடுவதாக TTV தினகரன் தெரிவித்திருந்தார். இந்நிலையில், பட்டுக்கோட்டை தொகுதியில் அமமுக, பாஜக கூட்டணியில் போட்டியிடுமா என்பது டிசம்பர் இறுதியில் தெரியவரும் என்று TTV கூறியுள்ளார். அதிமுக, மீண்டும் பாஜகவுடன் கூட்டணி அமைத்த பிறகு, அமமுக NDA-விலேயே உள்ளதாக நயினார் தெரிவித்தார். ஆனால் இதுகுறித்து பாஜகவிடம் கேளுங்கள் என EPS கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
News August 20, 2025
ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்தது

கடந்த ஒரு வாரத்திற்கு மேல் தங்கம் விலை தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹440 குறைந்து ₹73,440-க்கும், கிராமுக்கு ₹55 குறைந்து ₹9,180-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், வெள்ளி விலை கிராமுக்கு ₹1 குறைந்து ₹125-க்கும், கிலோ வெள்ளி ₹1000 குறைந்து ₹1,25,000-க்கும் விற்பனையாகிறது.
News August 20, 2025
தமிழக மக்களுக்கு அள்ளிக் கொடுத்தவர் மோடி: H ராஜா

துணை ஜனாதிபதி தேர்தலில் INDIA கூட்டணி போட்டியிட்டாலும், உறுப்பினர்களின் எண்ணிக்கைபடி NDA வேட்பாளரே வெற்றி பெறுவார் என H ராஜா தெரிவித்துள்ளார். சிவகங்கையில் பேசிய அவர், R வெங்கட்ராமனுக்குப் பிறகு தமிழகத்தில் இருந்து யாரும் துணை ஜனாதிபதியாக வராததால் திமுக MP-க்கள் CPR-ஐ ஆதரிக்க வேண்டும் எனக் கூறினார். அதிக முறை தமிழகத்துக்கு வந்த PM மோடி, மக்களுக்கு அள்ளி கொடுத்துள்ளார் என்றார்.