News May 8, 2024

ஐபிஎல்லில் இப்படியெல்லாம் நடக்கும் தான்

image

2, 3 பவுண்டரிகளைக் கொடுக்காமல் இருந்திருந்தால், போட்டியில் வெற்றி பெற்றிருப்போம் என RR கேப்டன் சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார். டெல்லிக்கு எதிரான போட்டிக்கு பின் பேசிய அவர், ஒரு ஓவருக்கு 11-12 ரன்கள் என்ற விதத்தில் போட்டியை கைக்குள் வைத்திருந்தோம் என்றும், ஐபிஎல்லில் இப்படியெல்லாம் நடக்கும் என்றும் கூறினார். மேலும், இதுவரை தோற்ற 3 போட்டிகளிலும் நெருக்கமாக வந்தே தோல்வி அடைந்ததாக அவர் தெரிவித்தார்.

Similar News

News November 20, 2025

ரொனால்டோவுக்கு தங்க சாவி பரிசளித்த டிரம்ப்

image

ரொனால்டோவை வெள்ளை மாளிகைக்கு அழைத்து டிரம்ப் தங்க சாவியை பரிசளித்தார். சவுதி இளவரசர் முகமது பின் சல்மான், FIFA தலைவர் கியானி இன்ஃபான்டினோ ஆகியோருடன் டிரம்ப் ஏற்பாடு செய்திருந்த விருந்திலும் ரொனால்டோ கலந்து கொண்டார். ரொனால்டோ வெள்ளை மாளிகைக்கு வந்தது மகிழ்ச்சி எனவும், தனது மகன் அவரது தீவிர ரசிகன் என்றும் டிரம்ப் தெரிவித்தார். இது தொடர்பான புகைப்படங்களை பகிர்ந்து ரொனால்டோ நன்றி தெரிவித்துள்ளார்.

News November 20, 2025

BIG NEWS: தனியாக கட்சி தொடங்கினார்..பெயர் அறிவிப்பு

image

மதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யா திராவிட வெற்றிக் கழகம்(DVK) என்ற புதிய கட்சியைத் தொடங்கியுள்ளார். சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 1000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். மதிமுகவில் துணைப் பொதுச்செயலாளராக இருந்த மல்லை சத்யா, வைகோவுக்கு அடுத்த நிலையிலிருந்து கட்சியை வழிநடத்தினார். கருப்பு, சிவப்பு வண்ணத்துடன் கூடிய கட்சியின் கொடி அறிமுக விழாவில் நாஞ்சில் சம்பத் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

News November 20, 2025

ஒரே நாளில் அதிரடியாக ₹3,000 குறைந்தது

image

வெள்ளி விலை இன்று(நவ.20) கிலோவுக்கு ₹3,000 குறைந்துள்ளது. 1 கிராம் ₹173-க்கும், பார் வெள்ளி 1 கிலோ ₹1,73,000-க்கும் விற்பனையாகிறது. அமெரிக்கா, சீனா போன்ற முக்கிய நாடுகளுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்ட முன்னேற்றங்கள் காரணமாக இந்தியாவில் வெள்ளி விலை வீழ்ச்சி கண்டுள்ளதாக நிபுணர்கள் கூறியுள்ளனர். இது சில வாரங்கள் நீடிக்கும் என கணித்துள்ளதால் முதலீட்டாளர்கள் கவனமாக இருப்பது நல்லது.

error: Content is protected !!