News January 28, 2026
அரியலூரில் அறுவடை இயந்திர வாடகை நிர்ணயம்

அரியலூர் மாவட்ட ஆட்சியர் பொ.இரத்தினசாமி தலைமையில், தனியார் நெல் அறுவடை இயந்திரங்களுக்கான வாடகை நிர்ணய கூட்டம் நடைபெற்றது. பெல்ட் டைப் இயந்திரத்திற்கு மணி ரூ.2600, டயர் டைப் இயந்திரத்திற்கு மணி ரூ.1800 என தீர்மானிக்கப்பட்டது. அரசு இயந்திரங்கள் குறைந்த வாடகையில் முன்பதிவு மூலம் பயன்படுத்தலாம். உழவர் செயலி வழியாக தனியார் உரிமையாளர்களை தொடர்புகொள்ளலாம்.
Similar News
News February 17, 2026
அரியலூர்: உங்க குழந்தைகளுக்கு மாதம் ரூ.4,000 வேண்டுமா?

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும், பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!
News February 17, 2026
அரியலூர்: ஹவுஸ் ஓனர் தொல்லையா? உடனே CALL

அரியலூர் வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பணம் இழுபறி போன்ற பல பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. வாடகைக்கு இருக்கும் வீட்டில் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். இதை SHARE பண்ணுங்க!
News February 17, 2026
அரியலூர்: நீங்களும் இ-சேவை மையம் தொடங்கலாம்

தற்போதைய நவீன காலகட்டத்தில் அரசின் பல்வேறு நலத்திட்டங்களுக்கு இ-சேவை மையங்கள் வாயிலாகவே விண்ணப்பிக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே தமிழகத்தில் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில் சொந்தமாக இ-சேவை மையங்கள் தொடங்கிட அரசு அனுமதிக்கிறது. இதில் விருப்பமுள்ளவர்கள் tnesevai.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் மாதம் ரூ.30,000 வரை சம்பாதிக்கலாம். ஷேர் பண்ணுங்க!


