News January 28, 2026

தி.மலை கோயில் ராஜ கோபுர ரகசியம்!

image

தி.மலை என்றவுடன் நினைவுக்கு வருவது அண்ணாமலையார் கோயில்தான். அப்படிப்பட்ட கோயிலின் ராஜகோபுரம் கிருஷ்ணதேவராயர் காலத்தில் கட்டப்பட்டது. அதனால்தான் இது ராயர் கோபுரம் என அழைக்கப்படுகிறது. இந்த கோபுரத்தை கட்ட ஆரம்பித்த கிருஷ்ணதேவராயர், தஞ்சை பெரிய கோயில் கோபுரத்தை விட அதிக உயரம் கொண்டதாக இருக்க வேண்டும் என நினைத்து 217 அடி உயர கோபுரமாக அமைத்தார். பலருக்கும் தெரியாத இதனை ஷேர் செய்து தெரியப்படுத்துங்க!

Similar News

News February 6, 2026

தி.மலை: அரசு வழங்கும் இலவச வீடு – APPLY LINK..!

image

தி.மலை மக்களே, 1 லட்சம் இலவச வீடுகள் கட்டப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார். இதற்கு விண்ணபிக்க ஆன்லைன் வசதியை அரசு ஏற்படுத்தி உள்ளது. <>இங்கு <<>>க்ளிக் செய்து புதிய பயனாளர் பதிவில் ‘ஐடி’ உருவாக்கி, கோரிக்கை வகையில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் விண்ணப்பியுங்க . இதில் உங்க விண்ணப்ப நிலையை அறிந்து கொள்ளலாம். நிலம் இல்லாதவர்களுக்கு வீடு உண்டு இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்யுங்க..!

News February 6, 2026

தி.மலை: உயிரை கையில் பிடித்து வாழும் மக்கள்

image

ஆரணி அடுத்த தச்சூர் பகுதியில் கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் இருளர் இன குடும்பத்திற்கு சமத்துவபுரம் வீடு கட்டிக்கொடுக்கப்பட்டது. அந்த வீடுகள் அனைத்தும் தரமற்ற முறையில் இருப்பதாகவும், தொட்டாலே பெயர்ந்து விழுவதாகவும் மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் தங்கள் உயிருக்கு எந்த உத்தரவாதமும் இல்லை எனவும், வீடு கட்ட ஒதுக்கிய நிதியை கொள்ளை அடித்தவர்கள் மீது நடக்கடிகை எடுக்க வேண்டும் எனவும் குமுறுகின்றனர்.

News February 6, 2026

தி.மலையில் நாளை பவர் கட்!

image

தி.மலை மாவட்டத்தில் நாளை(பிப்.7) காலை 9 – மாலை 4 வரை கீழ்பென்னாத்தூர், கருங்காலிகுப்பம், கரிக்கலாம்பாடி, கணியாம்பூண்டி, மானாவரம், ராயம்பேட்டை, குன்னங்குப்பம், வேடநத்தம், நாரியமங்கலம், தள்ளாம்பாடி, கடம்பை, ஆராஞ்சி, ஆரணி டவுன், சைதாப்பேட்டை, வி.ஏ.கே நகர், சத்தியமூர்த்தி சாலை ஆரணிப்பாளையம், அரியப்பாடி, கொசப்பாளையம், குன்னத்தூர், சேத்துப்பட்டு ரோடு, ஈ.பி நகர் ஆகிய பகுதிகளில் மின் தடை.

error: Content is protected !!